சீனாவில் வேலை செய்பவரின் எண்ணிக்கை
cri
கடந்த ஆண்டு, சீனாவில் வேலை செய்பவரின் எண்ணிக்கை 75 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இருந்ததை விட சுமார் 76 லட்சம் அதிகமாகும் என்று சீன தொழிலாளர் நலன் மற்றும் சமூக காப்பீட்டு துறை அமைச்சின் தொழிலாளர் அறிவியல் ஆய்வகத்தின் துணை தலைவர் Mo Rong தெரிவித்துள்ளார். இன்று பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த ஆண்டு, ஒட்டுமொத்த சீர்திருத்தக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தி, பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்வதற்கு உத்தரவாதம் அளித்தது. இது, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு அடிப்படையை உருவாக்கியுள்ளது. தவிர, கடந்த ஆண்டு, ஆள்குறைப்பு மூலம் வேலை நீக்கம் செய்யப்பட்டோருக்கு மறு வேலை வாய்ப்பை வழங்கும் கொள்கை மேலும் மேம்படுத்தப்பட்டது. குடி பெயரும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெறும் நிலைமையும் மேம்பட்டுள்ளது. இதன் விளைவாக, சீனாவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.
|
|