2004ம் ஆண்டில், SHI JUAN என்னும் பெண்மணி, தமது வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவு எடுத்தார். இந்த இலையுதிர்காலத்தில், அவள் தென் சீனாவின் SHEN ZHEN நகரிலுள்ள வழக்கறிஞர் அலுவலகத்தின் வேலையை விட்டு, ஆசிரியராக வேலை செய்ய, மிக தூரத்திலுள்ள மலை பிரதேசத்துக்கு சென்றார்.
SHEN ZHEN நகரில், நிரந்தரமான வேலையையும், அன்பும் அக்கறையும் காட்டிய கனவன் மற்றும் அன்பான மகனையும் கொண்டிருந்தார். ஒரு பெண் விரும்பிய வாழ்க்கை முழுவதுமாக, அவருக்கு கிடைத்திருந்தது. நிம்மதியான வாழ்வைக் கைவிட்டு, ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலுள்ள GUI ZHOU மாநிலத்தின் மலை பிரதேசத்துக்கு போய்ச் சேர்ந்ததற்கு காரணம் என்ன? அவரின் பதில் மிகவும் எளிது.
மலை பிரதேசத்தின் மாணவர்களுடன் கலந்துபழகி, கல்வித் தொண்டு புரிவதன் மூலம், அவர்களின் கருத்துக்களை மாற்ற விரும்புகின்றேன். பாடங்களை அவர்கள் அக்கறையாகப் படிக்கின்றனர். நான் சிறிது முயன்று, அவர்களுடைய அறிவு பெறும் திறனைப் புரிந்துகொள்ள விரும்பினேன் என்றார் அவர்.
தற்போதைய சீனாவில், SHI JUAN அம்மையாரை போன்றோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். சமூக சேவை செய்ய மேன்மேலும் அதிகமானோர் விரும்புகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், சீன அரசும், அரசுசாரா அமைப்புகளும், ஆண்டுதோறும் தொண்டர்களைத் திரட்டி, பொருளாதாரம் பின்தங்கிய மேற்குப் பகுதிக்கு அனுப்புகின்றன. இந்த தொண்டர்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சிகிச்சை, வேளாண் உற்பத்தி, சட்ட ஆலோசனை, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவின் மேற்குப்பகுதியிலுள்ள தொண்டர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை எட்டியுள்ளது.
அவர்களின் ஒருவராகப் போயுள்ள SHI JUAN, பல முற்போக்கான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். நகர வாழ்வில் SHI JUANக்கு, உணவு மற்றும் உடை பிரச்சினை இருக்கவில்லை. ஆனால், அமைதியான வாழ்க்கைக்கு அப்பாலும் செயல்பட வேண்டும் என்ற உளமார்ந்த மனமுடைய அவர். உதவித் தேவைப்படும் மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என நினைக்கின்றார். கணவரின் புரிந்துணர்வும் ஆதரவும் அவருக்கு பெரிய ஊக்கம் அளிக்கின்றன.
அவரின் கணவன், பெயர் ZHANG WEI SONG. குழந்தைப் பருவத்தில் கிராமத்தில் வாழ்ந்ததால், கிராமக் குழந்தைகள் கல்விகற்பதில் உள்ள இன்னல்களை நன்கு தெரிந்து வைத்திருந்தார். இதனால், மனைவி கல்வித் தொண்டு புரிவதற்காக மேற்கு பகுதிக்குச் செல்வதற்கு அவர் ஒப்புதல் அளித்தார்.
|