
கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்து இயலின் நவீனமயமாக்கப் பணிகள் நல்ல முன்னோற்றம் கண்டுள்ளன என்று சீன அறிவியல் தொழில் நுட்ப துறையின் துணை அமைச்சர் Liu Yan Hua தெரிவித்துள்ளார். இன்று மக்கெளவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்தியலின் நவீனமயமாக்கப் பணி 1997ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. கடந்த சில ஆண்டுகளின் முயற்சி மூலம், இத்துறையில் ஆய்வு வளர்ச்சி தொடர்ந்து மேம்பட்டு, தற்சார்பும் புத்தாக்கமும் தெளிவாக வலுப்பட்டு வருகின்றன என்றார். தவிர, புதிய வகை சீன மருந்துகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், சீன மருந்துத் தயாரிப்புத் தொழில் கட்டுமானம் பூர்வாங்க பயன் அளித்துள்ளது. சீன மூலிகைகளை பயிரிட்டு, பதனிடும் தொழிலும் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றது என்றார்.
|