சர்வதேச செலாவணி மையமான ஷாங்காய் மாநகர்
cri
கிழக்கு சீனாவிலுள்ள ஷாங்காய் மாநகர், சர்வதேச செலாவணி மையமாக மாற்றம் அடைகிறது என்று ஷாங்காய் மாநகரின் செலாவணி விவகாரத்துறைத் துணை நகராட்சி தலைவர் Feng Guo Qin கூறியுள்ளார். இன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், செலாவணித் துறையை முதலிடத்தில் வைக்கும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தில் ஷாங்காய் ஊன்றி நிற்பதாக தெரிவித்தார். பல ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், ஷாங்காய் மாநகரில் செலாவணித் துறையின் நிதி திரட்டப்பட்டு, அது நாளுக்கு நாள் பரவல் செய்யப்படுகிறது. நாணயப் பாதுகாப்பு கட்டுப்பாடு பூர்வாங்க பயன் அளித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். சீனாவின் ஷாங்காய் மாநகரில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டு நிதி நிறுவனங்கள் மிக அதிகமாக உள்ளன. தற்போது, இம்மாநகரில் 300க்கு அதிகமான அன்னிய முதலீட்டு நிதி நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
|
|