
சீனாவில் முதலாவது சர்வதேச மாரதான் உச்சநிலை கருத்தரங்கு சீனாவின் சியா மன் நகரில் நடைபெற்றது. சீனா மாரதான் விளையாட்டு பற்றிய தொழில்முறை கருத்தரங்கை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். மனிதப் பண்பு, மாரதான் விளையாட்டு, நகர வளர்ச்சி முதலியவை இக்கருத்தரங்கில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
2014 ஆசிய விளையாட்டு போட்டியை நடத்த விண்ணப்பிப்பது பற்றி இந்திய விளையாட்டுத் துறை அதிகரி முன்வைத்த முன்மொழிவை அரசு அங்கீகரித்துள்ளது என்று இந்திய செய்தி மற்றும் வானொலித் துறை அமைச்சர் இபால். ரேடி மார்ச் 29ஆம் நாள் கூறினார். இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன். சிங் தலைமை தாங்கிய ஒரு அமைச்சரவை கூட்டத்தில் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியை விண்ணப்பிப்பதில் புது தில்லியை ஆதரிப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்ததாக ரேடி குறிப்பிட்டார். பெரும் முயற்சியுடன் மிக சிறந்த விண்ணப்பத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சரவை கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொது மக்களுக்கான வானொலி இசை உடல்பயிற்சியை நாடு முழுவதும் பரப்புவது பற்றிய செய்தியாளர் கூட்டத்தை சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகம் மார்ச் 23ஆம் நாள் வட சீனாவிலுள்ள தியன் ச்சின் நகரில் நடத்தியது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணியின் வளர்ச்சியுடன் சீன மக்கள் பல்வடிவ உடல் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். மக்கள் அனைவரும் உடல்பயிற்சி மேலும் விரிவாக நடைபெறுவதற்குத் துணைபுரிவது என்பது, பொது மக்களுக்கான வானொலி இசை உடல்பயிற்சியை பரப்புவதன் நோக்கமாகும் என்று சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் துணைத் தலைவர் சாங் பா ச்சியாங் கூறினார்.

ஸ்னூக்கா ( SNOOKER) எனும் உலக தொழில்முறை பில்லியர்ட்ஸ் (BILLIARDS) சுற்றுமுறை போட்டியின் சீன ஒப்பன் போட்டி மார்ச் 27ஆம் நாள் பெய்சிங்கில் துவங்கியது. முதல் நாள் சீனாவின் 6 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இளம் வீரர் லியாங் வென் போ 5-4 என்ற செட் கணக்கில் பிரிட்டிஷ் வீரர் நிகல் பாண்டைத் தோற்கடித்து, தகுதி போட்டியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சீன வீரராக விளங்கினார்.
விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை கூறி, ஊக்க மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய பின்விளைவை உணர்த்தி அவர்களுக்குத் துணைபுரிய வேண்டும் என்று உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் தலைவர் DICK POUND மார்ச் 22ஆம் நாள் கூறினார். பல்வேறு தரப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்துக்கு எதிராக போராடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாண்டு அக்டோபர் திங்களில் பாரிஸில் நடைபெறவுள்ள, யுனெஸ்கோவின் ஆதரவை பெற்றுள்ள உலக ஊக்க மருந்து எதிர்ப்பு மாநாட்டுக்கு பல்வேறு நாட்டு அரசுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
|