• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-05 15:07:12    
செல்வம் கருத்தரங்கின் முதலாவது பகுதி

cri
மே திங்கள் 16ம் நாள் முதல் 18ம் நாள் வரை செல்வம் கருத்தரங்கு சீனாவின் பெய்சிங் மாநகரில் நடைபெறும். சீன அரசு தலைவர் ஹுச்சின்தாவ் இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொள்வதோடு முக்கிய உரை நிகழ்த்துவார். "மூன்றாவது முறையாக சீனாவுக்கு செல்ல ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம்"என்று "செல்வம்"இதழை வெளியிம் மைக் பொஃட்ரெயும் "செல்வம் " மாநாட்டு தலைமை இயக்குனர் ராபர்ட் பிர்மெனும் நியுயார்க்கில் "உலகம்"எனும் சீன இதழின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது கூறியுள்ளனர்.

இது பற்றிய உள்ளடக்கம்.

செய்தியாளர்.......செல்வம் எந்த வரையறையில் கருத்தரங்கு நடைபெறும் இடத்தை தேர்வு செய்கின்றது?செல்வம் கருத்தரங்கு எத்தனை முறை சீனாவில் நடைபெற்றுள்ளது.

பிர்மென்.....பொருளாதார வளர்ச்சியுள்ள இடங்களில் கருத்தரங்கு நடைபெறுவது வழக்கம் இல்லை. ஆனால் அப்பிரதேசம் பொருளாதாரத்தில் மிகவும் துடிப்பாக இயங்கும் இடமாக இருக்க வேண்டும். செல்வம் கருத்தரங்கு சீனாவில் நடைபெறுவது இதுவே மூன்றாவது மூறையாகும். முதலாவது முறை 1999ல் ஷாங்காயில் நடைபெற்றது. இரண்டாவது முறை 2001ல் ஹாங்காங்கில் நடைபெற்றது. இவ்வாண்டு பெய்சிங்கை மூன்றாவது முறை கருத்தரங்கு நடைபெறும் இடமாக நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

செய்தியாளர்.......2001ல் கருத்தரங்கு ஹாங்காங்கில் நடைபெற்ற போது அமெரிக்க இணையத்தில் தலைமை செயலாளராக பணி புரிந்த திரு லீ வென் துவக்க விருந்தில் வாழ்த்துரை நிகழ்த்தினார். "செல்வம்"இதழ் ஒரே நாட்டில் மூன்று முறை உலகளவிலான கருத்தரங்கு நடத்துவது சீனா உலக பொருளாதார வர்த்தக துறையில் முக்கிய பங்கு வகிப்பதை இது எடுதது காட்டுகின்றது. 2005ல் "செல்வம்"கருத்தரங்கு மூன்றாவது முறையாக சீனாவுக்கு திரும்பும். இது "செல்வம்"கருத்தரங்கில் வரலாற்றில் புதிய பதிவு அல்லவா என்று லீ வென் கேட்டார்.

பொஃட்ரெ....... நீங்கள் சொன்னது சரிதான். சீனா "செல்வம்"கருத்தரங்கின் வரலாற்றில் பல முறை சாதனை நிகழ்த்தியுள்ளது. சீனா உலக பொருளாதார வரலாற்றில் பல முறை அரிய சாதனைகளை தந்துள்ளது. செய்தியாளரின் கூர்மையான உணர்வுடன் சீனாவில் நிகழ்ந்த அற்புதத்தில் கவனம் செலுத்தியுள்ளோம்.

செய்தியாளர்...... "வரும் 50 ஆண்டுகளில் சீனா"என்பது 1999ல் "செல்வம்"கரத்தரங்கின் தலைப்பாகும். "ஆசியாவின் புதிய தலைமுறை" 2001ல் "செல்வம்"கருதரங்கின் தலைப்பு. இவ்வாண்டில் நடைபெறும் கருத்தரங்கின் தலைப்பு "சீனாவும் புதிய ஆசிய நூற்றாண்டும்"என்பதாகும். 6 ஆண்டுகளில் மூன்று முறை நடைபெறும் கருதரங்குகளின் தலைப்புகள் மாற்றப்பட்டதே இதற்கு என்ன பொருள்?

பொஃட்ரெ......தற்போதைய உலக பொருளாதாரத்தில் முக்கியமாது சீனாவின் வளர்ச்சி தான். ஆசியாவின் பொருளாதாரம் வெகுவேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக சீனாவின் வளர்ச்சி மிக சிறப்பானது. எதிர்வரும் அதன் சாதனையும் முக்கியத்துவும் மேலும் பெருகும். உலகத்தில் இருக்கின்ற தொழில் முனைவோரும் வணிகர்களும் சீனா பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர். நாங்கள் உறுதிப்படுத்திய மூன்று கருத்தரங்குகளின் தலைப்புகள் இந்த வளர்ச்சியுடன் தொடர்புடையன. 1999ல் ஷாங்காயில் நடைபெற்ற கருதரங்கில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்களிடையே பலர் சீனாவுக்கு முதல் முறையாக வந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. அப்போது அழைப்பை பெற்ற தொழில் முனைவோர் பலர் இப்போது சீனாவில் மூதலீடு செய்து தொழில் நடத்துவதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இப்போது கவனம் செலுத்தும் குவிமையமும் 1999ல் செலுத்திய குவிமையமும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக சீனாவில் முதலீடு செய்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அந்நிய தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இறுகபற்றி சீனத் தலைவர்களின் எண்ணத்தையும் கொள்கை தீர்மானத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. இவையனைத்தையும் கருத்தில் கொண்டு இவ்வாண்டு செல்வம் கருத்தரங்கு சீனாவின் தலைநகரான பெய்சிங்கில் நடத்துவது உலகம் எதிர்பார்க்கின்ற தேர்வாகும். இதுவும் ஒரேயொரு தேர்வு முறையாகும்.