
சீனாவில் சிங்காய்-திபெத் இருப்புப்பாதையின் கட்டுமானம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 3ஆம் நாள் இந்த இருப்புப்பாதைக்கு போடப்படும் தண்டவாளம், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரிலுள்ள Dang Qiong மாவட்டத்தில் நழைந்துள்ளது. சிங்காய் மாநிலத்து தலைநகர் Xi Ningயிலிருந்து திபெத் தன்னாட்சி பிரதேசத்து தலைநகர் லாசா நகருக்கு இந்த இருப்புப்பாதை செல்லும். இவற்றில், Xi Ningயிலிருந்து, சிங்காய் மாநிலத்தின் Golmud வரையான பகுதி 1984ஆம் ஆண்டில் இயங்கத் துவங்கியது. சிங்காய்-திபெத் இருப்புப்பாதை போடும் பணி திட்டமிட்டபடி 2006ஆம் ஆண்டில் நிறைவு பெற்று தொடக்கி வைக்கப்படலாம். இந்த இருப்புப்பாதை போடப்படும் சிங்காய்-திபெத் பீடபூமி, சீனாவில் உயிரின வாழ்க்கைச்சூழல் மிக பலவீனமான பிரதேசங்களில் ஒன்றாகும். இருப்புப்பாதையின் நெடுகிலும் உயிரின வாழ்க்கைச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, சுமார் 200 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. காட்டு விலங்குகள் செல்வதற்காக 30க்கு அதிகமான தனிப் பாதைகள் திறந்து விடப்படுகின்றன. இது சீனாவின் முதலாவது கன ரக கட்டுமான பணியாகும்.
|