• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-05 11:22:02    
நேயர் நேரம்83

cri
மார்ச் திங்கள் 25-ஆம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளை முதல் ஒலிபரப்பில் கேட்டேன். ஒரு வழியாக நாங்கள் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மேற்கொண்ட இருசக்கர வாகனம் பற்றிய நிகழ்ச்சி 'உங்கள் குரல்' பகுதியில் வந்துவிட்டது. மாவட்டம்தோறும் நாங்கள் சந்தித்த நேயர்கள் அனைவரும், நிகழ்ச்சி ஏன் வரவில்லை எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தவித்து வந்தோம். தவறவிடப்பட்ட ஒலிநாடாவை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து ஒலிபரப்பிய உங்கள் அனைவருக்கும், குறிப்பாக கலையரசி, வாணி ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேயர் அனுப்பும் ஒலிநாடாக்களை உடனுடக்குடன் பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்து அதைப் பாதுகாக்க வேண்டும். இது போன்ற பிரச்னை மீண்டும் நேராமல் கவனமுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில் கும்பகோணம் பள்ளி தீவிபத்து பற்றி தனது பிள்ளைகள் இருவரைப் பறிகொடுத்த தாயார் மஞ்சுளா அவர்களின் வேதனைக் குரலை தவிர்த்தது நல்ல சமயோசிதமான முறை. பாராட்டுக்கள். 'சீனாவிற்கு அப்பால்' நிகழ்ச்சியில் அமெரிக்காவில் விண்வெளித்துறையில் சாதனை நிகழ்த்திய சில சீனர்கள் பற்றிய என்னுடைய கட்டுரையை ஒலிபரப்பியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்றார்போல இப்போதுதான் இந்த நிகழ்ச்சி இருப்பதாக கடந்த இரண்டு வாரங்களாக எனக்கு பல நேயர்கள் தொலைபேசி மூலம் பாராட்டுத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி பற்றி நேயர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 'நேயர் நேரம்' மூலமாக கருத்துக்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். 'செய்திகள்' மற்றும் 'செய்தித் தொகுப்பு' ஆகிய நிகழ்ச்சிகள் மூலம், கிர்கிஸ்தான் நிலைமை பற்றிய விரிவான முறையில் செய்திகளை அறிந்து கொண்டேன். கிர்கிஸ்தான் நிலைமைய! ;ை சர்வதேச சமூகம் சரியான முறையில் அணுக வேண்டும் என எனக்குக் கவலையாக இருக்கிறது. தற்போதெல்லாம் எரியும் வீட்டில் பிடிங்கியது லாபம் என்ற கண்ணோட்டம் சில வலுவான நாடுகளிடம் தோன்றிவிட்டன. பிரச்னைத் தீர்ப்பதாக கூறிக்கொண்டு, காலூன்றிக் கொள்கிறார்கள். இந்நிலையில், கிர்கிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என சீனா விருப்பம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதே வேளையில், நிலைமைய உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் தெரிவித்திருக்கும் கருத்து கவனத்துடன் நோக்கத்தக்கது. நன்றி. ஏப்ரல் திங்கள் இரண்டாம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளைக் கேட்டேன். நேற்றைய தினத்தைவிட இன்று ஒலிபரப்பு நிலைமை பரவாயில்லை. கொஞ்சம் தெளிவĬ! 6;க இருந்தது. இந்நிலை தொடர்ந்தால் போதுமானது. இன்றைய 'செய்திகள் 'மூலமாக, சீனக் கோமின்டாங் கட்சியின் துணைத்தலைவர் தலைமையிலான பிரதிநிதிக்குழு, தனது 5 நாள் பெருநிலப் பகுதி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தைவான் திரும்பியது என்ற செய்தியைக் கேட்டேன். சீனத்தலைவர் திரு.சன்யாட்சென் அவர்களால் துவக்கப்பட்ட கோமின்டாங் கட்சி, தாய்நாட்டின் ஒன்றிணைப்புக்குப் பாடுபட்டு, அதை விரைவுபடுத்த உரிய முனைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டினĮ! 1; முதல் மூன்று திங்கள் காலத்தில், சீனாவில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சத்தை எட்டியுள்ளது என்பதை அறிந்தேன். மிகக் குறுகிய காலத்திலேயே இத்தனைப் பயணிகளை ஈர்த்த சீனாவிற்க&#! 3009; என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாண்டு, பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையில் சீனா கண்டிப்பாக முதலிடம் பெறும் என நான் உறுதியாக நம்புகின்றேன். 'சீனத் தேசிய இனக்குடும்பம்' நிகழ்ச்சியில், 'சீனாவில் முஸ்லிம் உணவுப் பொருள் மீதான உத்தரவாதம்' என்ற கட்டுரையைக் கேட்டேன். இதற்கு முன் கேட்டிராத, அரிய தகவல்கள! ்