வணக்கம் நேயர்களே, 听众们,你们好!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களைச் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று இரண்டாம் பாடத்தின் ஐந்தாம் பகுதியை படிக்கின்றோம். முதலில் கடந்த முறை படித்தறிந்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.
A:请问,您做什么工作?
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்.
B:我是老师。
நான் ஒரு ஆசிரியர். அதாவது, நான் ஒரு ஆசிரியராக வேலை செய்கின்றேன்.
இங்கு 老师என்றால், ஆசிரியர் என்பது பொருள். 老师என்ற சொல்
教师என்றும் சொல்லலாம். இந்த இரண்டு சொல் ஒரே பொருள். சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 10ந் நாள் ஆசிரியர் நாளாகும்.
இப்பொழுது எங்களுடன் சேர்ந்து இந்த உரையாடலை படியுங்கள்.
இப்பொழுது இன்னொரு உரையாடலைப் பார்க்கலாம்.
A:请问,您在哪儿工作?
நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்
B:我在学校工作,我是老师。您做什么工作?
நான் பள்ளிகூடத்தில் வேலை செய்கின்றேன், நான் ஒரு ஆசிரியர், நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்.
A:我在公司工作,这是我的名片。
நான் ஒரு கூட்டு நிறுவனத்தில் வேலை செய்கின்றேன், இது எனது முகவரி அட்டை.
B:谢谢!
இந்த உரையாடலில் 请问,您在哪儿工作,您做什么工作,我是老师 ஆகிய மூன்று வாக்கியங்கள் ஏற்கனவே படித்தறிந்தோம். மனதில் பதிந்திருக்கின்றனவா. 学校,公司,我的,名片 ஆகிய நான்கு சொற்கள் புதிதாக தோன்றியவை. இப்பொழும் இந்த சொற்களை விளக்கிக் கூறுகின்றேன்.
学校 என்றால், பள்ளிகூடம் என்பது பொருள், 公司 என்றால் கூட்டு நிறுவனம் என்பது பொருள். 我的 என்றால், எனது, என், அல்லது என்னுடைய என்பது பொருள். 名片 என்ற சொல்லின் பொருள், முகவரி அட்டை என்பதாகும்.
எங்களுடன் சேர்ந்து இந்த உரையாடலை படியுங்கள்,
A:请问,您在哪儿工作?
B:我在学校工作,我是老师。您做什么工作?
A:我在公司工作,这是我的名片。
B:谢谢! (每句两遍)
இப்பொழுது இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளூங்கள்
நேயர்கள் நமது தமிழ் ஒலிபரப்பு ஒரு மணிநேர நிகழ்ச்சியாக மாறிய பிறகு, தமிழ்மூலம் சீனம் நிகழ்ச்சி வாரத்துக்கு ஒரு முறை ஒலிபரப்பாகின்றது. முன்பு இரண்டு வாரம் ஒருமுறை தான். இப்படி ஒவ்வொரு முறையும் புதிய பொருள் கற்றுக்கொண்டால், நமது நேயர்களுக்கு பயிற்சி செய்யும் நேரம் போதாது என்று நினைகின்றேன். ஆகவே இந்த இரண்டாம் பாடம் முழுவதும் படித்த பின், மறு ஒலிபரப்ப எண்ணுகின்றேன். இல்லை என்றால், இவற்றைக் கிரகித்துக்கொள்ள நேயர்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும் அல்லவா. தங்கள் கருத்து என்ன, தொலைப்பேசி அல்லது வான் அஞ்சல் மூலம் எங்களுக்கு தாராளமாக தெரிவிக்கலாம்.
இத்துடன், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
|