குறுகியகால தொண்டுனர் வாழ்க்கை மூலம், சி ஜியுவான் அம்மையார் சீனாவின் மேற்குப் பகுதியை மேலும் ஆழமாக புரிந்துகொண்டுள்ளார். மலையிலுள்ள குழந்தைகளின் அறிவுகற்கும் ஆர்வம் கண்டு, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.
சி ஜியுவான் கற்பித்த துவக்கப்பள்ளி, GUI ZHOU மாநிலத்தின் தூரமான மலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. அது, கடல் மட்டத்துக்கு மேல் 2000 மீட்டர் உயர்த்தி உள்ளது. செங்கலால் கட்டப்பட்ட 5 சிறு அறைகள் கொண்ட பள்ளியில், சுமார் 170 மாணவர்கள் படிக்கின்றனர். கழிவு இரும்புத் தகரத்தைத் தட்டும் ஒலி தான், வகுப்புத் துவங்குவதற்கான அழைப்பாகும்.
நாள்தோறும் சி ஜியுவான், இந்த அழைப்பு ஒலித்ததும் வகுப்பு அறைக்குள் நுழைகிறார். மொழி மற்றும் இலக்கியம் பாடத்தை கற்பிப்பதோடு, வெளியே உலகத்தைப் பற்றி குழந்தைகளிடம் மிக அதிகமாகப் பேசி அறிமுகப்படுத்தினார்.
இங்கு, மாணவர்கள் தான், அவரின் முழுமையான வாழ்க்கை ஆகும். சி ஜியுவான் யைப் பொறுத்த வரை, வசதியான நகரவாழ்க்கையை விட்டு, புதிய இடத்துக்கு வந்து வாழ்வது, மகிழ்ச்சியாக பசுமையாக இருக்கிறது. அவர் மகிழ்ச்சியுடன், மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து, மலையில் வாழ்க்கை நடத்துகிறார். மலையிலான சிறந்த அமைதியையும், மலையின் கீழுள்ள சிறிய ஆற்றையும், இங்கு வாழ்கின்ற கிராமவாசிகளையும் அவருக்கு பிடிக்கிறது.
சி ஜியுவான் இக்கிராமத்துக்கு வந்தது, இந்த மலைக் கிராமத்துக்கு பசுமைக் காற்றைக் கொண்டுவந்துள்ளது. உள்ளூரின் கிராமவாசிகள் அனைவரும், இந்த நகரின் ஆசிரியையை ஏற்றுக்கொண்டுள்ளனர். கிராமவாசி யியான் சான் குவான் கூறியதாவது:
வசதிகள் நிறைந்த சான் சான் மாநகரிலிருந்து எமது மலைப்பகுதிக்கு வந்த அவர், பெண்ணாக இருந்த போதிலும், இன்னலைத் தாங்கிக்கொள்கிறார். அவரின் ஆர்வம் மதிக்கப்பட வேண்டும் என்றார் யியான் சான் குவான்.
இங்குள்ள குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். அவர்களுக்கு ஆசிரியர் சி ஜியுவான் யை உளமார பிடிக்கிறது. மலையிலுள்ள குழந்தைகளின் சிறப்பு வழிமுறைகளின் மூலம் சி ஜியுவான் மீதான அன்பைத் தெரிவித்து வருகின்றனர். சி ஜியுவான் கூறியதாவது:
பாடத்தைக் கற்பித்த போது, சில மாணவிகள் திடீரென வேக வைத்த உருளைக்கிழங்கை வழங்கினர், சில மாணவிகள் ஆரஞ்சுப்பழத்தை வழங்கினர். சில மாணவர்கள் மலர்களை எனக்குத் தந்தார்கள் என்றார் சி ஜியுவான்.
இப்பொழுதிலும், அவரின் மனதில் இனிமையாக உணர்கின்றார். அன்பான, சுத்தமான குழந்தைகளைப் பார்த்த போது, அவர் தமது 6 வயதான மகனை நினைக்கும். மகனை நினைவும் போது, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார். ஆனால், சி ஜியுவான் மலைப் பிரதேசத்தில் தொலைத்தொடர்பு வசதி சரியில்லை. ஆகவே, அவர் அடிக்கடி செல்லிடப் பேசியில் பேச, வீட்டு உச்சியில் போய் பேச வேண்டியுள்ளது. தொலைபேசியில், மகனின் பல பிரச்சினைகளைக் கேட்டு, கவலைப்படுகிறார். மலையிலுள்ள குழைந்தகளை விட, மகன் வசதியான வெளிச்சமான அறையில் படிக்க முடியும். இதுவே அதிர்ஷ்டமானது.
|