இவ்வாண்டின் பிப்ரவரி திங்கள் இறுதி வரை, சீனாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறுவப்பட்ட அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 10 ஆயிரமாகும். உண்மையில் பயன்படும் அன்னிய முதலீட்டுத் தொகை 57 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்று சீன சர்வதேச வர்த்தக வளர்ச்சிக் கமிட்டியின் துணைத் தலைவர் Wang Jin Zhen கூறியுள்ளார். நேற்று Xi An நகரில் நடைபெற்ற சீனச் சர்வதேச முதலீடு மற்றும் நிதி பற்றிய கருத்தரங்கில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் சீனா ஈர்க்கும் அன்னிய முதலீட்டுத் தொகை வளரும் நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளது என்று கூறினார்.
|