சீனத் துணை தலைமை அமைச்சரின் கோரிக்கை
cri
சீனா இவ்வாண்டும் தானிய விளைச்சல் வளர்ச்சியை தொடர்ந்து அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை தொடர்ந்து பெருக்க வேண்டும் என்று சீனத் துணைத் தலைமை அமைச்சர் குய் லியான் யு கூறியுள்ளார்.
அண்மையில் சியாங் சி மாநிலத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது அவர் இதைத் தெரிவித்தார்.
பல்வேறு பிரதேசங்களும் தொடர்புடைய வாரியங்களும் நடுவண் அரசின் வேளாண் துறை ஆதரவுக் கொள்கைகளைச் செயல்படுத்தி, வேளாண் துறையிலான முதலீட்டையும் வேளாண் கடனையும் அதிகரிக்க வேண்டும் என்றார். தொழில் நுட்பப் பயன்பாட்டையும், தரமான விதைகளையும், சாகுபடி முறைகளையும் பரப்ப வேண்டும் என்றும் குய் லியான் யு கோரியுள்ளார்.
|
|