• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-12 14:23:40    
கடந்த வாரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் (1)

cri

ஏப்ரல் 3ஆம் நாள் பெய்சிங்கில் முடிவடைந்த SNOOKER சீன ஒப்பன் போட்டியில் 18 வயதான சீன வீரர் திங் ச்சுன் ஹுய் 9-5 என்ற செட் கணக்கில் உலகில் புகழ் பெற்ற ஸ்கோட்லாந்து வீரர் STEPHEN HENDRY ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சீன ஒப்பன் போட்டி, உலக தொழில் முறை SNOOKER போட்டியின் கடைசி சுற்று போட்டியாகும். தற்போது உலக பெயர் வரிசையில் 62வது இடம் சீன வீரர், திங் ச்சுன் ஹுய்பெறுகின்றார். SNOOKER போட்டியில் மிகவும் நல்ல வாய்ப்பைக் கொண்டிருக்கும் இளம் வீரர்களில் ஒருவராக அவர் கருதப்படுகின்றார். 

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீராக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், 2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை, சுமார் 2 லட்சம் உயர் கல்வித்தகுதியுடைய பணியாளர்களை பயிற்றுவப்பது என்பது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு கமிட்டியின் முக்கிய பணிகளில் ஒன்றாகும் என்று இக்கமிட்டியின் துணைத் தலைவர் ச்சியாங் சியோ யூ அண்மையில் தெரிவித்தார்.

ஏப்ரல் 10ஆம் நாள் ஜப்பானில் நிறைவடைந்த பூப்பந்து ஒப்பன் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை சாங் நிங் 2-0 என்ற செட் கணக்கில் தனது அணி தோழியான சியே சிங் பாங்கைத் தோற்கடித்து சாம்பயன் பட்டம் பெற்றார்.

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்த விண்ணப்பிக்கும் 5 நகரங்களுக்கிடையிலான போட்டாப்போட்டி வரலாற்றில் மிகவும் தீவிரமானதாக இருக்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகே மார்ச் 31ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கூறினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஜூலை 6ஆம் நாள் சிங்கப்பூரில் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரை தீர்மானிக்கும் என்று ரோகே குறிப்பிட்டார்.

புதிய பயிற்சியாளர் சு குவாங் ஹு தலைமையிலான சீன ஆடவர் கால்பந்து அணி மார்ச் 29ஆம் நாள் அயர்லாந்தில் DUBLIN இல் அயர்லாந்து அணியுடன் நடத்திய ஒரு போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதனால் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுடன் சீன அணி தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டது. முன்னதாக சீன அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினின் அணியிடம் தோல்வி கண்டது.

ஏப்ரல் 10ஆம் நாள் ஜப்பானில் நிறைவடைந்த பூப்பந்து ஒப்பன் போட்டியின் ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் லின் தான் தனது அணி தோழர் சென் ஹொங்கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

2005ஆம் ஆண்டு பெய்சிங் தொடர் ஓட்ட மாரதான் போட்டி ஏப்ரல் 10ஆம் நாள் நடைபெறும். பெய்சிங் சர்வதேச தொடர் ஓட்ட மாரதான் போட்டி, பெரும் அளவுடைய சர்வதேச நெடுஞ்சாலை தடகளப் போட்டியாகும். இது 1986ஆம் ஆண்டு துவங்கியது. இவ்வாண்டு இந்த போட்டியின் 20ஆம் ஆண்டு நிறைவாகும். பத்துக்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் இவ்வாண்டின் போட்டியில் கலந்துகொள்வர். அவர்களில் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை சிங் குய் நாவும் மகளிர் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை சுன் யிங் ஜேயும் இடம்பெறுகின்றனர்.