• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-14 07:00:58    
கடந்த வாரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் (2)

cri

பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆதரவளிக்கும் வணிகர்களை திரட்டும் பணி அதிகாரபூர்வமாக துவங்குவதாக மார்ச 31ஆம் நாள் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி அறிவித்தது. உதவி தொகை மற்றும் உதவி முறை வேறுபட்டதாக இருப்பதனால், பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடர்புடைய வேறுபட்ட மூலவளத்தின் உரிமை மற்றும் நலனையும் வணிகர்கள் அனுபவிக்கிறார்கள்.

2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கூடைப்பந்தாட்ட உள்ளரங்கத்தின் கட்டுமானம் மார்ச் 29ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. அரு விளையாட்டு அரங்கம், அரசு நீச்சல் மையம், பெய்சிங் துப்பாக்கிச் சுடும் உள்ளரங்கம், லௌஷான் சைக்கிள் ஓட்டப் பந்தய உள்ளரங்கம் ஆகியவற்றை அடுத்து, பெய்சிங்கில் கட்டப்படும் 5வது புதிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அரங்கம் இதுவாகும். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக 36 விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட வேண்டும். அவற்றில் பெய்சிங்கில் 31 உம், ச்சிங் தௌவில் 5 உம் கட்டப்படுகின்றன. ஷாங்கை, தியன்சின், சென்யாங், ச்சின்ஹுவாங் தௌ ஆகிய மாநகரங்களும் பெய்சிங்கிற்கு உதவி செய்யும்.

ஏப்ரல் 7ஆம் நாள் ஜப்பானிய பூப்பந்து ஒப்பன் போட்டி மூன்றாம் நாளை அடைந்தது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர்கள் லின்தான், சென்ஹொங், பாவ் ச்சுன் லாய், சென் யூ ஆகியோர் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். மகளிருக்கான போட்டியில் சீனாவின் வீராங்கனைகளில் சோ மியை தவிர, இதர 5 இளம் வீராங்கனைகளும் உலகில் புகழ் பெற்றவர்களைத் தோற்கடித்தனர். இரட்டையர் போட்டிகளில் சீன வீ ரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் வெற்றி பெற்று கால் இறுதி போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர்.

மலையேற்றம் மலையோற்ற பருவமான 2005ஆம் ஆண்டு வசந்த காலம் வருவதுடன், உள்நாட்டு வெளிநாட்டு மலையேற்ற அணிகள் அடுத்தடுத்து திபெத் வரும். இந்த மலையேற்ற அணிகளில் பல, சுங்முலுங்மா சிகரத்தில் ஏற திட்டமிட்டுள்ளன.

2005ஆம் ஆண்டு ஐரோப்பிய மேசை பந்து சாம்பியன் பட்ட போட்டி ஏப்ரல் 3ஆம் நாள் தென்மார்க்கின் ஓஹுஸ் நகரில் நிறைவடைந்தது. அன்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் புகழ் பெற்ற பைரோ ரஷிய வீரர் சாம்சோநோவ் ஆடவர் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆஸ்திரியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் சீன வீராங்கனை லியூ ச்சியா மகளிர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இரண்டு மலை ஏறுபவர்கள் அண்மையில் கடல் மட்டத்திலிருந்து 7161 மீட்டர் உயரத்திலுள்ள புமோரி சிகரத்துக்கு ஏறிய பின், திரும்பும் வழியில் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாக நேபாள பண்பாட்டு, சுற்றுலா மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சகம் மார்ச் 30 ஆம் நாள் அறிவித்தது. புமோரி சிகரம் சீன-நேபாள எல்லையில் அமைந்துள்ளது.