வி------வணக்கம் நேயர்களே, நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்களை இரு கரம் கூப்பி வரவேற்பது விஜயலட்சுமி
ரா------ராஜாரம். இன்றைய நிகழ்ச்சியின் துவக்கமாக மின்னஞ்சல்கள்.
வி------அப்படியா. யார் அனுப்பியது.
ரா------வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் புதுவை பாலக்குமார் அமெரிக்காவில் இருந்து ஆல்பர்ட்
வி------ஆல்பர்ட் என்ன சொல்கிறார்.
ரா-------அவர் நமது ஒலிபரப்பை இணையத்தின் மூலவம் கேட்கிறார். அவர் கூறிகிறார்.
தாம்புரின் உணவு குறித்து எழுதியிருந்தீர்கள் படிக்கும் போதே நாவில் நீர் ஊறியது. படத்தில் பல வண்ணங்களில் படம் உள்ளது. செய்முறையில் அது பற்றிய விளக்கமில்லை. தாம்புரின் உணவு கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லையே. அவருக்கு பாராட்டுக்கள்.
அடுத்த வாரம் நீங்கள் ஒரு யுவானுக்கு வாங்கி சுவைத்த பரோட்டா குறித்து இப்போதே ஆவலைத் தூண்டுகிறது. இயலுமானவரை எழுத்துப்பிழை இல்லாமல் இருந்தால் நன்று. ஊமையர் நடிகை தைய் லி குவா கட்டுரை மிக நன்றி. இது போன்று நம் தமிழக கிராமீய கலைஞர்கள் குறித்து எழுதலாமே.
வி--------பாராட்டுக்கு நன்றி நேயரே, கவனக்குறைவால் எழுத்துப்பிழை ஏற்படுவதைத் தவிர்க்கிறோம். தமிழக கிராமியக் கலைஞர்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். கூடிய விரைவில் தமிழ் நாட்டின் நையாண்டி மேளத்தையும் சீனாவின் இடுப்புக் கொட்டு நடனத்தையும் ஒப்பிட்டு இசையுடன் ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்புவோம். கேட்டு விட்டு கடிதம் எழுதுங்கள். அடுத்து,
ரா--------புதுவையில் இருந்து என் பாலகுமார் அனுப்பிய மின்னஞ்சல் கடந்த மார்ச் திங்கள் 24ம் நாள் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் வழங்கிய சீனாவில் திருமணத்திற்கு முன் மருத்துவ பரிதோதனையை செய்துக் கொள்ளுவதின் அவசியத்தையும் செய்து கொள்ளவர்களில் எண்ணிக்கையையும், நாட்டின் பல கூறியது சிறப்பாக இருந்து. மேலும் இதைப்பற்றிய அதிகப்படியான புள்ளி விபரங்களை அறிய விரும்புகிறேன். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி புள்ளி வைத்து கோலம் போட்டது போல தெளிவாக இருந்தது.
இதே போல் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் மணப்பெண் கற்புடன் இருக்கிறாள் என்பதை மட்டும் மருத்துவ பரிசோதனை முறை அல்லாத வகையில் பரிசோதிப்பதும் இதனால் உயிர்சேதம் ஏற்படுவதும் வழக்கமான செயல். தயாரித்து வழங்கிய திரு ராஜாரம் அவர்களுக்கு புதுவை மன்றத்தின் சார்பாக பாராட்டுக்கள்.
வி-------பாராட்டுக்கு நன்றி பாலகுமார். தொடர்ந்து பல நல்ல நிகழ்ச்சிகளை அறிவியல் உலகில் நீங்கள் கேட்கலாம்.
|