• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-12 10:30:06    
நேயர் நேரம்86

cri
ரா-------செய்திகளில் சூடான் நாடு பற்றிய தகவல்களை விரிவாகக் கேட்டேன். ஆப்பிரிக்க நாடுகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து அறுயுங்கள் என்று சர்வதேச தமிழ்ப் பணி மன்றத்தைச் சேர்ந்த நேயர் பொன் ஏழிசை வல்லபி பாராட்டி விட்டு அலைவரிசைக் கோளாறு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வி-------நன்றி நேயரே. அலைவரிசை பற்றி கவனத்தில் கொள்வோம். ரா------வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் தமது மின்னஞ்சலில் அலைவரிசைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சீனப் பாடல்களை வழங்கும் மீனா தொடர்ந்து தேசிய இனப்பாடல்களாக வழங்காமல், வெவ்வேறு தலைப்புக்களில் இசை நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வி-------பாராட்டுக்கு நன்றி செல்வம் அவர்களே. சீனப் பாடல் நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்து மீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரா------இனி வான் அஞ்சல் கடிதங்கள் தர்புரிமாவட்டம் இராமியம் பட்டி நேயர் சீ பாரதி கடந்த ஆண்டு நவம்பர் 21 அன்று ஒலிபரப்பான விளையாட்டு செய்திகள் நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். தமிழ்ச் செல்வன் தொகுத்து வழங்கும் விளையாடுச் செய்திகளை கடந்த மார்ச் 26 அன்று கேட்டுவிட்டு, விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியில் ஏராளமான பல்வேறுவகைப்பட்ட போட்டிகள் பற்றிய செய்திகளை விரிவான முறையில் அறிந்து கொள்ள முடிந்தது. சீன கூடைப்பந்த அணிக்கு நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்து பிளேர் என்பவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்து கொண்டேன். இதன் மூலம் சீன அணிக்கு புதிய வலிவும் பொலிவும் சேர்ந்து பலம் பெற்று 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். வி------பாராட்டுக்களுக்கு நன்றி. அடுத்த கடிதம். ரா-------நந்தியாலம் நேயர் டி தணிகாசலம் தமது ஜனவரி திங்கள் கடிதத்தில் நம்முடைய பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக டிசம்பர் 28 அன்று ஒலிபரப்பான சீனக்கதை 30ம் நாள் அறிவியல் உலகம் நலவாழ்வு நிகழ்ச்சி ஆகியன இவருடைய கருத்தைக் கவர்ந்துள்ளது. வி-------பாராட்டுக்கு நன்றி நேயரே. ரா-------நந்தியாலத்தில் இருந்து நந்தினியும் கடிதம் எழுதியுள்ளார். அவர் சீனாவின் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் ஹாசன் கோவில் வரலாறு நன்றாக இருந்தது என்று கூறி, தொகுத்து ஒலிபரப்பிய மலர்விழிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். வி--------நேயர்களஇன் அக்கறையான கடிதங்களுக்கு நன்றி.