• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-15 19:59:45    
நேயர் நேரம்87

cri
ரா-------மதுரை மாவட்டம் கைத்தறி நகர் நேயர் ஜே டி ஆனந்தன் புஜியென் நகர் பொது அறிவுப் போட்டியில் நேயர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கியதைப் பாராட்டியுள்ளார். எங்களிடம் இருந்து விடைந்தாளைப் பெற்று அனுப்பி பரிசு கிடைத்ததும் நேரடியாக வந்து பாராட்டிய நேயர் மன்றத்திற்கு ஆனந்தன் நன்றி கூறியுள்ளார். வி------சீன வானொலி தமிழ் நேயர் மன்றம் மன்றம் என்பதற்கு ஒரு இலக்களைமாகத் திகழ்கிறது. நேயர்களுக்கும் சீன வானொலிக்கும் இடையே இமயம் தாண்டிய ஒரு பாலத்தை அமைத்துள்ளது. பாராட்டுக்கள். ரா-------புதுவையில் இருந்து ஜி. ராஜகோபல், சீன பாரம்பரிய மருத்துவத் தொழில் பற்றிய கலையரசியின் செய்தித் தொகுப்பைப் பாராட்டியுள்ளார். சீனப் பாரம்பரிய மருந்துக்கு உலகெங்கும் செல்வாக்கு இருப்பதை எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே அறிவேன் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். வி-------நோய் நாடி நோய் முதல் நாடி என்பார்கள், இதில் பாரம்பரிய மருத்துவம் என்பது இந்தியாவிலும் சரி சீனாவிலும் சரி இயற்கையுடன் தொடர்புடையது. பாராட்டுக்கு நன்றி. ரா-------நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே. கே. பேரிகன், கடந்த பிப்ரவரி 17 அன்று அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் டாக்டர் கே, பி, அர்ஜூன் அவர்களின் கருத்துக்கள் நன்றாக இருந்தன. இது போல மற்ற டாக்டர்களிடமும் கருத்துக்களை வாங்கி ஒலிபரப்பலாமே என்கிறார். வி-------ஒலிபரப்பலாமே. ஒலிபரப்புகிறோம். மதுரை டாக்டர் ஜவகர் அவர்கள் காது பற்றஇ சொன்ன தகவல்களை நேயர் செல்லூர் சீனிவாசன் அனுப்பினார். அதை ஒலிபரம்பினோம். காது கொடுத்து கேட்டீர்களா. ரா--------தி மாங்குடி நேயர் ஆர் சிவஞானம், கடந்த பிப்ரவரி மாதம் எழுதிய கடிதம் FM நேடியோவின் தாக்கத்தால் மற்ற வானொலிகளின் நிகழ்ச்சிகள் பின்னுக்குத்தள்ளப்படுகின்றன. சீன வானொலியிலும் மாதந்தோறும் வினா-விடைப் போட்டி நடத்தி நேயர்களுக்கு பரிசுகளை வழங்கலாம். நேயர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்தும் பரிசும் அனுப்பலாம் என்கிறார் இவர். வி-------நேயரே, நீங்கள் சொல்வது நல்ல யோசனை. ஆனால், ஒகு வித்தியாசம். FM நேடியோ வணிக நோக்குடன் நடத்தப்படுவது, சீன வானொலியோ சேவை நோக்குடன் நடத்தப்படுவது. ரா-------உணவு அரங்கம் நிகழ்ச்சியில் குறிப்புக்கள் வேகமாகச் சொல்லப்படுகின்றன. அதே போல தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியிலும் வேகமான வாசிப்பு, நிதானம் தேவை. ஒவ்வொரு சொற்களுக்கும் இடைவெளி தேன்று என்கிறார். ராமியம்பட்டி நேயர் சீ பாரதி.