• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-14 15:52:32    
சீனத் தொழில் நிறுவனங்கள்

cri

மே திங்களில் சீனாவின் பெய்சிங் மாநகரில் நடைபெற உள்ள செல்வம் கருத்தரங்கு பற்றி செய்தியாளர் கண்ட பேட்டியின் மூன்றாவது பகுதியை படியுங்கள்.

செய்தியாளர்......2004ம் அண்டில் உலகின் 500 வலிமைமிக்க தொழில் நிறுவனங்கள் பட்டியலில் 16 சீன தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நிறுவனங்களுக்கு ஏதாவது வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய யோசனைகளை முன்வைக்கலாமா?

பெஃட்ரெ.......நீங்கள் குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் மிகவும் தலைசிறந்த தொழில் நிறுவனங்களாகும். நிர்வாக மற்றும் நிதி துறைகள் பற்றி மேலும் சிறந்த யோசனைதஷ் என்னிடம் இல்லை. சொல்லப் போனால் அடுத்த பத்துக்கும் அதிகமான ஆண்டுகளில் சீனக் கூட்டு நிறுவனங்கள் மாபெரும் அளவில் சேர்க்க உள்ளன. இப்போதே இப்படி யோசிக்கலாமா? அதாவது, சமூகத்திலிருந்து செல்வம் ஈட்டுவது தவிர அறநிலைச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் சமூகத்துக்கு பங்கு ஆற்ற வேண்டாமா? சீனாவில் உள்ள பலவீனமான குழுக்களுக்கு பொருளாதார உதவி வழங்கி முழு சமூகமும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியினால் பயனையை முயற்சி செய்யலாமா? இப்படி செயல்பட்டால் தொழில் நிறுவனங்கள் பற்றிய சமூகத்தின் பொறாமையை தவிர்க்க முடியும்.

செய்தியாளர்........செல்வம் கருத்தரங்கு தேர்ந்தெடுத்த 500 தொழில் நிறுவனங்கள் பெரிதென கருதப்படுகின்றன. வலிமைமிக்கது என்று உண்மையாக பொருள்பட வில்லை. ஆகவே செல்வம் பட்டியலை தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இலக்காக கருத வில்லை. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பெஃட்ரெ......ஆமாம். செல்வம் கருத்தரங்கு 500 வலிமைமிக்க தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் போது தொழில் நிறுவனத்தின் அளவை கருத்தில் கொண்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இன்னொரு பட்டியல் உண்டு. எடுத்துக்காட்டாக, "செல்வம் வேகமாக வளரும் 500 தொழில் நிறுவனங்களை" தெரிவு செய்யும் வரையறை தொழில் நிறுவனங்களின் அளவை கருத்தில் கொள்ள வில்லை. இதற்கு பதிலாக தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் முக்கியமானது. சீனத் தொழில் நிறுவனங்கள் செல்வம் கருத்தரங்கின் மற்ற பட்டியலில் உறுப்பினராக வளர வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

செய்தியாளர்.........2005ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் நிதானமற்ற காரணிகளை எதிர்நோக்குகின்றது. இந்த பின்னணியில் சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றி நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? சீனப் பொருளாதாரத்தில் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சினை என்ன?

பெஃட்ரெ.........சீனாவின் எதிர்காலம் மிக சிறப்பானது. அதேவேளையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. வேகமாக வளரும் துறைகள் உறுதிப்படுத்தாத காரணிகளை எதிர்நோக்குவது இயல்பே. மாற்றம் வளர்ச்சி ஆகியவை பொதுவாக கூறின் சிறப்பானவை. எங்களுக்கு மேலும் கூடுதலான வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது என் சொந்த கருத்தாகும்.

சீனப் பொருளாதாரத்தில் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சினை என்ன என்பது பற்றி பதிலளிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் சீனப் பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றோம். மற்றவர்கள் நெருக்கடி பற்றி பேசுவதை நாங்கள் காதுகொடுத்துக் கேட்க விரும்பவில்லை.