• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-14 18:08:06    
வூத்தான் மலை

cri
எனினும், அது பளப்பளப்பாகக் காணப்படுகின்றது. உண்மையிலே, இந்தத் தங்க மண்டபம் முழுமையாகத் தங்கத்தால் கட்டப்பட்டதல்ல. அது, வெண்கலத்தால் கட்டப்பட்டு, பிறகு தங்கமுலாம் பூசப்பட்டது. அதற்கு 20 டன் தரமான வெண்கலமும், 300 கிலோகிராம் தங்கமும் பயன்படுத்தப் பட்டனவாம். சீனாவில் மிகப் பெரிய வெண்கல மண்டபம் இதுவாகும். எங்கள் செய்தியாளர் இந்த மண்டபத்துக்கு அருகில் சென்ற போது, மண்டபத்திற்கு முன் வாசலிலுள்ள ஏணிப் படியின் கீழ் மதத்தவர் சிலர் தலை குனிந்து வணங்குவதைக் கண்டார். வேறு சிலர், தலை வணங்கி, மனதில் இருப்பதைச் சீட்டில் எழுதிவைத்தனர். அவர்கள் பாடியதைக் கேளுங்கள், வூத்தான் மலையிலுள்ள அனைத்து அரண்மனைகளையும் போல, இத்தங்க மண்டபத்திலும் வூத்தான் மலையின் முக்கிய தெய்வமான சென்வூ மன்னரின் செம்புச் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வுருவச்சிலையில் சென்வூ மன்னர் பரட்டைத் தலையுடனும் வெறுங் கால்களுடனும் இருப்பதாகக் காணப்படுவது ஏன்?இந்தக் காட்சித் தலத்தில் சுமார் 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் கொச்சாங்சு இதன் காரணத்தை விளக்கிக்கூறினார். வூத்தான் மலையிலுள்ள சென்வூ மன்னர் உருவச் சிலைகளனைத்தும், யுன்ல மன்னர் மாதிரியின் படி செதுக்கப்பட்டவையாம். சென்வூ மன்னர் பரட்டைத் தலையுடனும் வெறுங் காலுடனும் காணப்படுவதற்கு ஒரு கதை உண்டு. அவர் கூறுகிறார், அப்போது, இந்த மண்டபம் கட்டப்பட்ட பின், சென்வூ மன்னரின் உருவச்சிலையைச் செதுக்க வேண்டியிருந்தது. சென்வூ மன்னரின் தோற்றம் உண்மையில் எப்படி இருக்கும் என்பது பற்றியும் அவரு டைய உருவச்சிலையை எப்படிச் செதுக்கலாம் என்பது பற்றியும் எவருக்கும் தெரியவில்லை. சென்வூ மன்னர் பற்றிய கதை ஒரு கட்டுக்கதை. எவரும் அவரைப் பார்த்தது இல்லை. சிற்பிகள் சிலர் அவரைத் தேவ தூதராக வர்ணித்தனர். வேறு சிலர் அவரை பிசாசு போல வர்ணித்தனர். இதைக் கண்டு மன்னர் ஆத்திரமடைந்து பலரைக் கொலை செய்தார். பின்னர், மன்னரின் எண்ணத்தை ஊகித்துவிட்ட ஒரு சிற்பி மன்னரைச் சந்திக்கச் சென்றார். அப்பொழுது தான் குளித்துவிட்டு, பீடத்தில் அமர்ந்த மன்னரின் வெறும் காலை மட்டும் கண்டார். ஏனென்றால் அப்போதைய விதிகளின் படி, சாதாரண மக்கள் மன்னரைச் சந்திக்கும் போது, தலை நிமிரக் கூடாது. வணங்க வேண்டும். பேரரசரின் கால் மட்டும் கண்டிருக்கின்றேன், பேரரசரின் முகத்தைக் காணவில்லை என்றார் அவர். நீ தலை நிமிர்ந்து பேரரசரின் முகத்தைப் பார் என்றார் யுன்ல மன்னர். இதற்குப் பின், மன்னர் யுன்லவின் உருவப்படி, உருவச் சிலையை அவர் செதுக்கினார். இதனால், அதற்குப் பிந்திய வூத்தான் மலையிலுள்ள அனைத்து அரண்மனைகளிலும் காணப்படும் சென்வூ மன்னரின் உருவச் சிலைகள் வெறும் காலுடன் காணப்படுகின்றன என்றார் அவர்.

1  2