• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-15 10:43:49    
சீன பெண் தொழிலாளர் உரிமை பாதுகாப்பு

cri

சீனாவில், பெண்கள், ஆண்களுக்கு சமமான உழைப்பு வாய்ப்பும் ஊதியமும் பெற்றுள்ளனர். பெண் உழைப்பாளிகளின் சட்டப்பூர்வமான உரிமையையும் நலனையும் பேணிகாக்கும் பொருட்டு, சீனத் தொழிற்சங்கம், பெண் தொழிலாளர் கமிட்டியை உருவாக்கியுள்ளது. மேன்மேலும் அதிகமான தொழில் நிறுவனங்கள், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில், தனியார் பொருளாதாரம் சீனாவில் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. தனியார் தொழில் நிறுவனங்களில் மேன்மேலும் கூடுதலான மகளிர் பணிசெய்கின்றனர். கிழக்கு சீனாவிலுள்ள சியாங்சு மாநிலத்தின் நான்ஜின், தனியார் தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ள நகரமாகும். இங்கு, அமைப்பு முறை மேம்படுத்தப்படாததால், பெண் தொழிலாளர்களின் உரிமையும் நலனும் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது. பெண் தொழிலாளிகள், கருவுற்ற போதும், பேறு காலத்திலும், அவர்களின் உரிமை மற்றும் நலன்களைப் பயனுள்ளதாக பேணிகாக்க முடிய வில்லை. சில நேரத்தில், வேலை வாய்ப்புக்கான போட்டியில், பெண்கள், பிரித்துப் பார்க்கப்பட்டனர். இந்த நிலைமை குறித்து, கடந்த ஆண்டின் இறுதியில், நான்ஜின் நகரம், தனியார் தொழில் நிறுவனங்களில் பெண் தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் சிறப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தி, இதற்கு தொழில் முனைவோர்களின் வாக்குறுதியைக் கோரியுள்ளது.

FENG LIN YA GE எனும் உணவு மற்றும் விளையாட்டு தொழில் நிறுவனம், நான்ஜினிலுள்ள தனியார் ஹோட்டல் ஆகும். அதன் பணியாளர்களில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பெண் தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் சிறப்பு உடன்படிக்கையில், தொழில் நிறுவனம் ஒவ்வொரு பெண் தொழிலாளருடனும் கையொப்பமிட்டுள்ளது. அதன் ஆளுனர் லியான் யூ சியன் அம்மையார் கூறியதாவது:

உழைப்பு சட்டம், தொழிற்சங்கச் சட்டம், பெண் தொழிலாளர் உழைப்பு பாதுகாப்பு விதிமுறை, சியான் சு மாநிலத்து பெண் தொழிலாளர் உழைப்பு பாதுகாப்பு விதிமுறை உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்கள் மற்றும் சட்ட விதிமுறைகளின் படி, எமது நிறுவனத்தின் உண்மை நிலைமையுடன் இணைந்து, இந்த சிறப்பு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது. சமமான வேலையில் ஈடுபடும் பெண்களும் ஆண்களும், சமாமான ஊதியம் பெறுவது என்பது, இதன் முக்கிய உள்ளடக்கமாகும் என்றார் அவர்.

30 வயதான தின் யூ தி அம்மையார், இந்த ஹோட்டல் அறை குழுவின் தலைவராவார். இங்கு சுமார் 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றார். செய்தியாளரிடம் பேசிய அவர், தொழில் நிறுவனம், வெளியூர் பெண் தொழிலாளர்களுக்கு இலவச குடியிருப்பு இடத்தை வழங்கி, கோடைகாலத்தில் குடிக்க குளிர் நீரை வழங்கி, தொழிலாளரின் பிறந்த நாளில், கேக் வழங்கி வருகிறது. இங்கு வேலை செய்வது மனதிற்கு இதமாக இருக்கிறது என்றார்.