கடந்த டிசம்பர் திங்கள் 26ஆம் நாள் இந்து மாக்கடலில் நிகழ்ந்த கடல்கொந்தளிப்பு, இப்பிரதேசத்தின் சுற்றுலாத் தொழிலுக்கு குறுகிய காலத்தில் இழப்பை ஏற்படுத்தியது. ஆனால் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இதன் பாதிப்பு சிறிய அளவு தான் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று இதை அறிவித்தது.
இந்த கடுமையான இயற்கை சீற்றத்தில் நல்ல வேளையாக, எந்த முக்கிய தொழில் கட்டமைப்பும் துறைமுக வசதிகளும் சீர்குலைக்கப்படவில்லை. பொருளாதாரக் கோணத்திலிருந்து பார்த்தால், பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என்று சிங்கப்பூரின் ஒரு கூட்டு நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் சுங் செங் ஹுவன் கூறினார்.
தென் இந்தியாவின் தொழில் நகரான சென்னையிலும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட துறைமுக வசதிகள் டிசம்பர் 27ஆம் நாளே மீண்டும் இயங்க துவங்கிவிட்டன என்று பொங் பொ செய்தி நிறுவனம் அறிவித்தது.
இந்த நில நடுக்கம் இந்தோநேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள ஒரு மிக பெரிய திரவமாகிய இயற்கை வாயு ஆலைக்கு அருகில் நிகழ்ந்த போதிலும், அந்த ஆலையின் இயந்திரங்கள் பெரிதும் குலைக்கப்படவே இல்லை என்று இந்தோநேசிய அரசு கூறியது.
பெரும் பகுதி இழப்பு சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டதால், இந்த இயற்கை சீற்றத்தால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற கூற்றின்மீது தாம் சந்தேகப்படுவதாக சிங்கப்பூர் சிதி குழுத் தனியார் வங்கியின் பொறுப்பாளர் ஹன்ஸ். கொதிசி கூறினார்.
உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காடு வகிக்கும் தாய்லாந்தில் புச்சியும் இதர சுற்றுலாத் தலங்களும் சீர்குலைக்கப்பட்டதால், அதன் சுற்றுலாத் தொழில் குறுகிய காலத்திற்குப் பாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த இயற்கை சீற்றத்தால், இலங்கையின் சுற்றுலாத் துறை மந்தமாகதான் மறுமலர்ச்சியடையும். அரசாங்கத்துக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நிகழ்ந்த 20 ஆண்டுகால உள்நாட்டு போருக்குப் பின், கடந்த ஆண்டு இந்நாட்டுக்கும் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தனர். ஆனால், கொழும்பிலிருந்து தென் பகுதியிலுள்ள கடலோர சுற்றுலாத் தலத்துக்கு செல்லும் போக்குவரத்து வழி கடுமையாக சீர்கெட்டுள்ளது. இதை சீரமைக்க ஓராண்டு தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு, மலேசியா, தென் இந்தியா ஆகிய இடங்களில் சுத்தமான கடற்கரை அழகான தென்ன தோப்பு, நீல நிறமுடைய கடல் நீர் ஆகியவற்றை பயணிகள் மிகவும் விரும்பி கண்டுக்களிக்கிறார்கள். ஆனால், அங்கு நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பு நிகழ்ந்ததால், சுற்றுலாத் தொழில் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு செய்தித்தாள் ஒன்று கூறுகின்றது. வெளிநாட்டு பயணிகள் மாலத்தீவு, இலங்கை, மற்றும் தாய்லாந்தின் கடலோரப் பிரதேசத்துக்கு வராமல் இருப்பது, இந்த நாடுகளின் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 2002 முதல் 2003 வரை, இப்பிரதேசங்களின் சுற்றுலாத் தொழில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு, வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதில் இந்த நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டதால், இப்பிரதேசங்களின் சுற்றுலாத் தொழில் தெளிவாக சீரடைந்தது.
இந்தோநேசியாவின் சுமத்ரா தீவு பயணிகள் முதலில் சென்றுபார்க்க வேண்டிய இடம் அல்ல. பாரி தீவு, சிரிபோஸ் தீவு, ஜாவாத் தீவு ஆகிய இடங்களை விட, அங்கு செல்லும் பயணிகள் குறைவு தான். சுற்றுலாத் தொழிலானது, இந்தோநேசியா அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான நான்கு துறைகளில் நான்காவது இடம் பெற்றுள்ளது. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தோநேசிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், கடல் கொந்தளிப்பு நிகழ்ந்த பின், இத்துறை முந்திய நிலைமைக்கு மீட்கப்படுவதற்கு இன்னும் சில காலம் தேவை.
ஆனால், தாய்லாந்து மற்றும் மலேசிய பொருளாதாரம் அண்டை நாடுகளைவிட சற்று வேகமாக வளர்ந்துவருகின்றது. பங்காக் சிறிதளவேனும் நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்படவில்லை. பயணிகள் முற்றிலும் கவலைப்படாமல் தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று இந்நாட்டின் சுற்றுலா நிர்வாகத் துறை மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் கூறுவதாக இந்த செய்தித்தாள் மேலும் அறிவித்தது.
|