கடந்த ஆண்டு சீன சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, உலகில் மூன்றாவது இடம் வகிப்பதாக உலக வர்த்தக அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீன வணிக அமைச்சகத்தின் செய்தி அலுவலகம் இன்று தனது இணையத்தில் இச்செய்தியை வெளியிட்டது. கடந்த ஆண்டு, சீனாவின் ஏற்றுமதி, உலகின் மொத்த ஏற்றுமதியில் 6.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இறக்குமதியோ, உலகின் மொத்த இறக்குமதியில் 5.9 விழுக்காடாகும். கடந்த ஆண்டு, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ஜப்பான், பிரான்சு, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் வர்த்தகம் உலகின் முதல் 10 இடங்களில் உள்ளது.
|