பெய்சிங் சர்வதேச தொடர் ஓட்ட மாரத்தான் போட்டி ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவடைந்தது. 11 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். மகளிர் பிரிவில் எத்தியோப்பிய அணி 2 மணி 18 நிமிடம் 8 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சீன அணி, 2 மணி 19 நிமிடம் 36 வினாடியுடன் இரண்டாம் இடம் பெற்றது. ஆடவர் பிரிவில், கெனிய அணி 2 மணி 4 நிமிடம் 17 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றது.
துப்பாக்கி சுடும் போட்டி 2005ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான துப்பாக்கி சுடும் போட்டியின் தென் கொரிய சுற்று ஏப்ரல் 10ஆம் நாள் சியோல் நகரில் துவங்கியது. முதல் நாள் நடைபெற்ற 3 நிகழ்ச்சிகளில் சீன விளையாட்டு வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்பதால், ஒருவர் கூட முதல் மூன்று இடங்களில் நுழையவில்லை. எனவே அவர்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை. இந்த சுற்றுப் போட்டி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவதற்கான முதலாவது சுற்றுப் போட்டியாகும். 15 ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான அனைத்து போட்டிகளும் நடைபெறும். 9 ரைபிள் மற்றும் கைத் துப்பாக்கி சூட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றவர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளலாம். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாடான சீனவின் அணி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான 9 நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ளது.
உலக கோப்பைக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் பிரேஸில் சுற்று ஏப்ரம் 10ஆம் நாள் சாபோலாவில் நிறைவடைந்தது. அன்று சீன அணி மேலும் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களைப் பெற்றது. இறுதியில் சீன அணி மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றது. உலகளாவிய போட்டியில் முதல்முறையாக கலந்துகொள்ளும் சீன இளம் வீராங்கனை வாங் லி லி சரிசம நிலை விட்டம் போட்டியில் 9.450 என்ற புள்ளியுடன் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் நடைபெற்ற பூப்பந்து ஒப்பன் போட்டி ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவடைந்தது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர் லின்தான் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை சாங்நிங் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகள் யாங் வெய், சாங் ச்சியே வென் ஜோடி சாம்பியன் பட்டம பெற்றது. ஆடவருக்கான இரட்டையர் போட்டியில் டென்மார்க் அணியும், ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டியில் தாய்லாந்து அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.
|