
2005ஆம் ஆண்டு உலக மகளிர் ஐஸ் ஹாக்கி சாம்பியன் பட்டப் போட்டி ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் ஸ்வீடனில் நிறைவடைந்தது. அன்று பிற்பகல் நடைபெற்ற போட்டியில் சீன அணி 0-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜெர்மன் அணியிடம் தோல்வி கண்டு 6ஆம் இடம் பெற்றது. 19வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன அணி பெற்ற மிக சிறந்த சாதனை இதுவாகும்.
2005ஆம் ஆண்டு சீனத் தேசிய வாள் வீச்சு போட்டி ஏப்ரல் 10ஆம் நாள் தியன்சின் மாநகரில் துவங்கியது. ஆடவருக்கான போட்டியில் சீனாவின் புகழ்பெற்ற வீரர் வாங் ஹை பின் சாம்பியன் பட்டம் பெற்றார். ஷாங்கை அணியின் புகழ்பெற்ற வீரர் யே ச்சுங் ச்சியாங்சி மாநிலத்து அணியின் தௌ ச்சியாலோவிடம் தோல்வி கண்டு, கால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை.

2005ஆம் ஆண்டு சீனத் தேசிய பீச் வாலிபோல் சுற்றுமுறை போட்டியின் ஹைநான் சுற்று ஏப்ரல் 10ஆம் நாள் ஹைகௌ நகரில் நிறைவடைந்தது. ஷான்து மாநிலத்தின் பான் பிங் சாங் யு ஜோடி ஆடவருக்கான போட்டியிலும் ஆகஸ்ட் எட்டு அணியின் தியன்ச்சியா வாங் பெய் ஜோடி மகளிருக்கான போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றன. ஹைநான், சிங்கியாங், ஷாங்கை உள்ளிட்ட 13 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களின் 60க்கும் அதிகமான அணிகளைச் சேர்ந்த 120க்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
கூடைப் பந்து 2005ஆம் ஆண்டு உலக இடைநிலை பள்ளி மாணவர் கூடைப்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சீன சென்யாங் மாநகரைச் சேர்ந்த 31வது இடைநிலைப் பள்ளிகூடத்தின் ஆடவர் கூடைப்பந்து அணி 82-79 என்ற புள்ளிக்கணக்கில் லாத்விய அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடம் பெற்றது. சீன மகளிர் அணி43-64 என்ற புள்ளி கணக்கில் பிரெஞ்சு அணியிடம் தோல்வி கண்டு பத்தாம் இடம் பெற்றது. இந்த சாம்பியன் பட்டப் போட்டியில் மொத்தம் தலா 24 ஆண் பெண் அணிகள் கலந்துகொண்டன. ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவடைந்த ஒரு NBA கூடைப்பந்து போட்டியில் சீன வீரர் யோ மிங் இடம்பெறும் அமெரிக்க HOUSTON ROKETS அணி 98-97 என்ற புள்ளிக்கணக்கில் PHOENIX SUNS அணியைத் தோற்கடித்தது.
|