• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-17 17:19:43    
திபெத்தில் புதுப்பிக்க வல்ல எரியாற்றல் பயன்பாடு

cri

தற்போது, சூரியன் ஆற்றல், தரைக்கடி வெப்ப ஆற்றல்,காற்று ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்க வல்ல எரியாற்றலை சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் முனைப்புடன் பயன்படுத்துவதோடு, அறிவியல் முறையில் இவற்றை வளர்ச்சியுறச் செய்யும் வழிமுறையையும் ஆராய்ந்துவருகின்றது. திபெத்தில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி வளம் ஆகியவை எல்லைக்குட்பட்டவை. ஆனால், சூரியன் ஆற்றல், தரைக்கடி வெப்ப ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் வளம் நிறைந்து உள்ளன. இதனால், சூரியன் ஆற்றல் வளத்தின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டின் மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட நிலை அரசாங்க அலுவலகங்களின் மின்சாரப் பயன்பாட்டுப் பிரச்சினையும் மக்கள் குழுமி வாழும் இடங்களில் மின் விநியோகப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா. வளர்ச்சித் திட்டப்பணியகம், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளின் அரசாங்கங்கள் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதன் மூலம், திபெத்திலுள்ள தரைக்கடி வெப்ப ஆற்றல் வளம் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சீனாவில் மிகப்பெரிய தரைக்கடி வெப்ப ஆற்றல் மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. ஒதுக்குப்புற வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசத்தில், காற்று ஆற்றலின் பயன்பாடு வலுப்பட்டுள்ளது. தற்போது, இப்பிரதேசத்திலுள்ள காற்று ஆற்றல் வளம் பற்றிய மதிப்பீட்டுப்பணி நடைபெற்றுவருகின்றது. பெரிய காற்று ஆற்றல் மின் நிலையத்தின் கட்டுமானத்துக்கு ஆயத்தப்பணி மேற்கொள்ளப்படுகின்றது.