ரா------சீன தலைமை அமைச்சர் வெண்சியாபாங் மேற்கொண்ட தெற்காசியப்பயணம் நமது நேயர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியது. பல நேயர்கள் மின்னஞ்சல் மூலமாக வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சீன வானொலித் தமிழ்ச் செய்திகளும் செய்தித் தொகுப்பும் வெண்சியாபாங் பயணம் பற்றிய விரிவான தகவல்களைத் தந்ததாக வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் பாராட்டியுள்ளார். மதுரை நேயர் எஸ் பாண்டிய ராஜனும் சீனத் தலைமை அமைச்சரின் இந்தியப் பயணம் இரு நாடுகளின் உறவை மேம்படுத்தி, வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் நேயர் கா அருண் தமது மின்ணஞ்சலில் வெண்சியாபாவின் இந்த இந்தியப் பயணம் நிச்சயம் ஏதாவது ஒரு பயணைத் தரும் என்று குறியுள்ளார்.
வி-----உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. சீன தலைமை அமைச்சரின் இநம்தியப் பயணம் எந்த அளவுக்கு பயனளித்தது என்பதை எமது செய்திகள் மூலம் தெரிந்திருப்பீர்கள்.
ரா-----மதுரை மாவட்டம் கருப்பட்டி நேயர் கி பிரபாகரன் கடந்த ஏப்ரல் திங்கள் 6ம் நாள் ஒலிபரப்பான நூல் ஏற்றுமதி பொருட்காட்சி பற்றிய சிறப்பு தொகுப்பு நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். இதை விஜயலட்சுமியும் ராஜரமும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள் என்று குறிப்பிட்டு விட்டு கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வி-------அப்படியா, என்ன கருத்து.
ரா--------கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிக்காக சேந்தமங்கலம் ரவிச்சந்திரன், வேளுக்குறிச்சி செந்தில், அரியாக்க அன்டன் பட்டி இளங்கோ ஆகியோர் இணையதளம் மூலம் போட்டி நடத்தலாம்.
யோசனை தெரிவித்துள்ளனர். நான் இதை ஒப்புக் கொள்கிறேன். அப்போது தான் இணைய தளத்தை பயன்படுத்துவது அதிகரித்து, நிறைய நேயர்கள் நிலையத்துடன் எனிதில் தொடர்பு கொள்ள முடியும். கட்டுரை, கவிதை ஓவியம் என்று முதலில் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களின் படங்களையும் படைப்புக்களையும் இணைய தளத்தில் வெளியிடலாம் என்று கி பிரபாகரன் யோசனை தெரிவித்துள்ளார்.
வி-------நல்ல யோசனை. இதைக் கவனத்தில் கொள்கிறோம், அடுத்து.
ரா-------ஏப்ரல் திங்கள் 7ம் நாள் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான உலகும் பணி வயல்களால் உருவெடுக்கும் அபாயங்கள் என்ற கட்டுரை மிகச் சுவையானது. வழங்கிய ராஜாராம் அவர்களுக்கு நன்றி. அது போன்ற நேயர்கள் அறிந்திராத பல புத்தம்புது தகவல்களை வழங்க வேண்டும் என்ற கூறியுள்ள வளவனூர் புதுப்பாளையம் நேயர் எஸ் செல்வம் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் சதுப்பு நிலம் பற்றிக் கூறியதை பாராட்டியுள்ளார்.
|