• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-19 11:23:41    
நேயர் நேரம்89

cri
வி------நேயர் செல்வம் அவர்களே. உங்களைப் போலவே பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அறிவியல் உலகம் நிகழ்ச்சிக்காக ஆதிமனிதன் யார், என்றொரு அருமையான கட்டுரை தயாரகியுள்ளது. அதே போல சீனாவிலும் இந்தியாவிலும் காணப்படும் ஈமச்சடங்குகளை ஒப்பிட்டு இரண்டு கட்டுரைகள் சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் விரைவில் ஒலிபரப்பாகும். ரா-------சர்வதேச நூல்பொருள் பொருள் காட்சியில் பங்கேற்ற தமிழர்கள் ரவீந்திரநாதன் ராஜேந்திரன் ராமக்கந்திரன் ஆகியோரை பேட்டி கண்டு ஒலிபரப்பியதை பாராட்டிய வளவனூர் புதுப்பாளையம் செல்வம், இதற்காக நேயர்களால் பெரிதும் வருப்பப்படும் நேயர் நேரத்தை பலியிட வேண்டுமா என்று கேட்கிறார். மேலும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மன்ற நேயர்கள் கூறிய போது பதில் கடிதங்கள் வருவதில்லை என்ற குற்றச் சாட்டை ஏற்க முடியாது என்கிறார். விஜயலட்சுமி சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார். சீன வானொலிக்கு நாம் நிறையக் கடிதங்கள் எழுதினால் தான நிறைய பதில் கடிதங்கள் வரும் என்கிறார் செல்வம். வி--------உண்மை தான் உங்களுடைய கடிதங்களை திரும்பத்திரும்ப பார்க்கும் போது தான் எங்களுக்கும் ஒரு வேகம் விடைக்கும். சில நேரங்களில் முக்கியமான நிகழ்ச்சிக்காக சில வழக்கமான நிகழ்ச்சிகளை சில வழக்கமான நிகழ்ச்சிகளை பலி கொடுக்க வேண்டியுள்ளது சரி அடுத்து, வி------பாராட்டுக்கு நன்றி. அடுத்தபடியாக ரா------இருங்க பாராட்டு மட்டுமல்ல. ஒரு குறை கூறலும் வருகிறது. சீனக் கதையை வாசிக்கும் முறையில் மாற்றம் தேவை என்கிறார் பரசலூர் நேயர் உத்தமவீலன். அகில இந்திய வானொலியில் செய்தி மட்டுமே வாசித்த உங்களுக்கு சென்னை வானொலி வழங்கிய புதின பக்கங்கள் என்ற நிகழ்ச்சி பற்றித் தெரியுமா என்று வினவுகிறார். கதையை வாசிக்கும் போது. குரலில் சிறிய மாற்றங்களைச் செய்து வித்தியாசத்தைக் காட்டுங்கள் என்று யோசனை கூறுகிறார். வி-------அப்படியா, ராஜார இது உங்களுடைய நிகழ்ச்சி. நீங்கள் என்ன விளக்கம் சொல்கிறீர்கள். ரா-------நேயரின் யோசனைக்கு நன்றி. செயல்படுத்த முயற்சிக்கிறேன். வானொலியில் நான் செய்திமட்டுமே வாசிக்கவில்லை. செய்தி அறிவிப்பாளராகச் சேர்வதற்கு முன்னால் எட்டாண்டுகள் தில்ல அகில இந்திய வானொலி தென்கிழக்காசிய தமிழ் ஒலிபரப்பில் அறிவிப்பாளராக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக மொழ்பெயர்ப்பாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளேன். அந்த வகையில் சென்னை வானொலி மட்டுமல்ல, எல்லா வானொலி நிலையங்களின் நிகழ்ச்சி பற்றியும் தெரிந்து வைத்துள்ளேன். எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசன் போல் நடித்து விட முடியாது. நேயர் உத்தம சீலன் தெரிவித்த யோசனைகளைக் கவனத்தில் கொள்கிறேன். நன்றி.