வி-------குறையும் நிறையும் கூறி கருத்துக் கடிதங்களை எழுதிம் நேயர்களுக்கு நன்றி. சீனக் கதை நிகழ்ச்சியில் தொடர்ந்து பல கதைகள் தயாராகின்றன. கேட்டு மகிழ் தயாராக இருங்கள.அடுத்த கடிதம்.
ரா----இக்கடிதம் என் பாலகுமார் அனுப்பிய மின்னஞசல். வணக்கத்துடன் என்.பாலகுமார் சீன வானொலி நிலைய இயக்குனருக்கும், தமிழ் பிரிவு தலைவர் மற்றும் பணியாளர்களுக்கும், அவரவர் குடும்பத்தினருக்கும், சீன மக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்றைய தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளிடன் சீன வானொலி அறிமுகம் செய்தது போல இருந்தது. நிகழ்ச்சியின் ஒலிபதிவு சிறப்பாக இருந்தது. ஆரணி மன்றத்திற்கு நன்றி தெரிவிக்கவும்.நன்றி
தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் பாராட்டும்படியாக உள்ளது. 11.04.2005 அன்று ஒலிபரப்பிய முதல் சிறப்பு நிகழ்ச்சி, பழைய, புதிய நேயர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். 12.04.2005 இன்றைய 2-வது சிறப்பு நிகழ்ச்சியில் கோவை மாவட்ட மன்ற துவக்க விழா சிறப்பு தொகுப்பு சிறப்பாக இருந்தது. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மன்ற துவக்க விழாவும் இதுபோல சிறப்பாக துவக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆவல். மேலும் CRI SMS NET என்ற அமைப்பை பற்றி கேட்டு நேயர்கள் பலர் சேருவர்கள் என்று நம்புகிறேன். அறிவிப்பை போல் ஒலிபரப்பமால் நிகழ்ச்சியுடன் சேர்த்து பாராட்டுக்குரியது. நன்றி.
ரா--------பெரிய காலாப்பட்டு நேயர் பி சந்திர சேகரன் நமது பிப்ரவரி திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக சீனாவின் தென் மேற்கு பகுதியான உநான் மானிலத்தில் உள்ள லூகு ஏரிக்கரை ஓரமாக வாழ்ந்து வகும் மேசுவே இன மக்களின் புதுமையான காதல் முறை. பல ஆண்களுடன் பழகி. இத மூலம் கரு தரிப்பு உண்டாகி இந்த கருதரிப்புக்கு. யார் காரணம் என்பதை ஒரு விருந்தே வைத்து அதை ஒப்பு கொள்ளும் முறை என்று வாழ்த்து வரும் இவர்களுக்கு கூடிய விரைவில் எய்ட்ஸ் விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
சீனக் கதை தெடர் நடகத்தையே நினைவுபடுத்தும் வகையில் அமைந்து இருந்தது. கதையில் வரும் அனைத்து கதாபாத்திமாகவே மாறி மிக நன்றாக பேசி இருந்தார். ஒருவரே பல கதாபாத்திரங்களுக்கு, குரல் கொடுத்து கதை கூறும் தனது திறமையை நேயர்களுக்கு வெளிக்காட்டி உள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வி------பாராட்டுக்கு நன்றி. சீனக் கதை நிகழ்ச்சியில் தொடர்ந்து பல கதைகள் தயாராகின்றன. கேட்டு மகிழ்த்தயாராக இருங்கள்.
ரா-----எஸ். நாட்டாமங்கலம் நேயர் ஏ மாதுராஜ் கடந்த 30-12-2004 நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். அன்றைய தினம் நலவாழ்வுப்பாது. காப்பு நிகழ்ச்சியில் அரியாக்கவுடன்டன் பட்டி ஏ என் இளங்கோவன் கண்ணில் செய்யப்படும் லாஸிக் லேசர் சிகிச்சை பற்றி கூறியது பயனுள்ளதாக இருந்தது. அடுத்து குடல்புண்ணைத் தவிர்க்கும் வழிமுறைகளை பாண்டமங்கலம் நேயர் எம், தியாகராஜன் கூறினார். நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி பயனுள்ள பல தகவல்களைத் தருகிறது என்று கூறிகிறார். கடந்த ஜனவரி 6ம் நாள் ஒலிபரப்பான நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு வைட்டமின்கள் அவசியம் பற்றி ராஜாராம் கலையரசி கூறியது அறிவியல் வகுப்பு நடத்தியது போல் இருந்தது என்கிறார் பரசலூர் பி எஸ் சேகர்.
வி------பாராட்டுக்களுக்கு நன்றி நேயர்களே.
|