• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-19 09:38:21    
காது மீது மாபெரும் கவனம்

cri

கலையரசி...........பலர் காதிற்கும் பேச்சிற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறார்கள். உண்மையில் காது நன்றாக செயல்பாட்டால் தான் சரியாக பேசவே முடியும். ஆக ஒரு குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை எனில் காதினை கவனிக்க வேண்டும். பேச்சுக்கு என்று ஒரு இடம் மூளையில் 4, 5 ஆண்டுகள் வரைக்கும் காலியாகவே இருக்கும் சில குழந்தைகளுக்கு மற்ற பகுதிகளால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடும். எனவே குழந்தை பிறந்த உடன் அது அழாமல் இருந்தால் அல்ல்து காது கேளாமல் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும். பிறவியில் காது கேளாமல் இருக்கும் குழந்தைகளை ஒன்றரை வயதிலிருந்து மூன்று வயதிற்குள் கொண்டு வந்தால் அவர்களுக்கு இன்றைய நாளில் காது மருத்துவத்தில் புரட்சியாகவே வந்துள்ள காக்ளியர் இம்பிளாண்ட் என்ற அதிநவீன சிகிச்சை மூலம் காதின் கேட்கும் திறனை முன்னேற்றமடையச் செய்யலாம்.

ராஜாம்..............இந்த காக்ளியர் இம்பிளாண்ட் ஆஸ்திரேலியாவிலிருந்து இன்றைய நாளில் இறக்குமதி செய்யப்படுகின்றது. அதனால் தான் இந்த சிகிச்சை முறை அதிக செலவாகும் சிகிச்சை போல தோன்றுகின்றது. ஆனால் இந்த சரியான காலத்தை தவறவிட்டு குழந்தைகளை அழைத்து வந்தால் காக்ளியர் பொருத்தினாலும் கூட காது தான் சரியாக கேட்கும். ஆனால் பேச்சு சரியாக வராமல் போய்விடலாம்.

கலையரசி..............நன்றாக கேட்டுக் கொண்டிருந்த காது திடீர் என்று கேட்காமல் போவது எதனால்?

ராஜாம்...........காதை சாவி, பேனா, பட்ஸ் போன்றவற்றை போட்டு குடைவது, காது குறும்பையை எடுக்கிறேன் என்று காதை புண்ணாக்கிக் கொள்வது மேலும் வெளிக்காதில் மெழுகினாலும் அடைப்பும், கிருமி தொற்றும் காது கேளாமல் செய்யலாம். நடுக்காதில் குழந்தைகளுக்கு தம்ர் புகுந்து கொண்டாலும் காது கேட்காமல் இருக்கும். இன்னும் சிலருக்கு நடுக்காது பகுதியில் இருக்கின் otosolerosis என்கின்ற குட்டி எலும்பு அதிராமல் இருக்கும். இதனாலும் காது கேட்காமலிருக்கும். உள் காதில் உள்ள நரம்பு தளர்ச்சியுற்று வயதானவர்களுக்கு காது கேட்காமல் போகலாம். அது போல நடுக்காதில் தண்னீர் புகுந்திருந்தால் அதனை சுத்தம் செய்தாலும் காது கேட்கும். குட்டி எலும்பு அதிராமல் இருந்தால் அந்த எலும்பை எடுத்து விட்டு செயற்கை எலும்பு பொருத்தி காதினை கேட்க வைக்கலாம்.

கலை................காதில ஏதாவது பாதிப்பு வந்தால் மக்கள் பலவிதமான உபாயங்களை செய்து கொள்கிறாராகளே. இது சரிதானா?

ராஜாம்....................சுயமருத்துவம் என்கின்ற பெயரில் காய்ச்சிய எண்ணெய் ஊற்றுவது, தண்ரை பீய்ச்சி அடிப்பது, சில பச்சிலைகளின் சாறினை பிழிவது, வெங்காயச் சாறினை ஊற்றுவது போன்ற வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். அடுத்து இன்றைய நாளில் பலரிடம் பட்ஸ் உபயோகிக்கும் பழக்கம் உள்ளது. என்னை கேட்டால் இந்த பட்ஸை தடை செய்தால் கூட நல்லது என்பேன். அதிக சத்தத்தை வைத்துக் கொண்டு வாக்மேன் கேட்பது அதிக கதிர் வீச்சு உள்ள செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஜலதோஷம், தொண்டை பாதிப்பு வந்தால் உடனடியாக எச்சரிக்கையுடன் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும. இவ்வாறான விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் காதிற்கு வரும் கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம். இன்னொரு முக்கிய ஆலோசனை காதில் சேரும் அழுக்கினை வெளியே எடுக்கிறேன் என்று பலர் பலவிதமான குச்சி, சாவி, பேனா, பின் போன்றவற்றை வைத்து குடைகிறார்கள். உண்மையில் நமது காதினை இயற்கை அதி அற்புதமாக படைத்திருக்கின்றது. காதில் சேரும் அழுக்கினை நாம் எடுக்கத்தான் வேண்டும் என்பதில்லை. அது தானாகவே வெளியேறும் விதத்தில் காதினை இயற்கை வடிவமைத்திருக்கின்றது. எனவே காதினை யாரும் குடைய தேவையில்லை.

கலையரசி.........நேயர்கள் இதுவரை காதுப் பராமரிப்பு பற்றி மருத்துவருடன் ஒரு பேட்டியை கேட்டீர்கள். இத்துடன் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவுறுகின்றது.