பெரிய ரக அரசு தொழில் நிறுவனங்களின் லாபம்
cri
இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில், சீனத் தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டியின் நேரடி கண்காணிப்பில் உள்ள பெரிய ரக அரசு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள லாபம் 14 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இருந்ததை விட 31 விழுக்காடு அதிகமாகும். முதல் மூன்று திங்களில், இந்தப் பெரிய ரக அரசு தொழில் நிறுவனங்கள் நாட்டின் ஒட்டுமொத்த சீர்திருத்தக் கொள்கையை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளன. இவை தயாரிக்கும் முக்கிய உற்பத்தி பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவற்றின் நிர்வாகக் கட்டுப்பாடு வலுவடைந்து, எரியாற்றல் மேலும் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
|
|