பெய்சிங்கிலுள்ள தமிழர்கள்
cri
தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பெய்சிங்கில் வாழ்கின்ற தமிழர்கள் குழந்தைகளோடு ஏப்ரல் 17ம் நாள் பிற்பகல் இந்தியன் கிச்சன் எனும் உணவு விடுதியில் ஒன்று கூடினார்கள். மேலும் பெய்சிங் தமிழர் குழு ஒன்றையும் நிறுவியுள்ளனர். ஒரு முறை இந்தக் குழுவின் கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. 17ம் நாள் நடந்த முதலாவது கூட்டத்தில் சீன வானொலி நிலையத்திலிருந்து ராஜாராம், சுந்தரன், தி. கலையரசி ஆகிய மூவரும் விருந்தினராக கலந்து கொண்டனர். ராஜாராம் நிகழ்ச்சியை வழங்கி ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் சீன இந்திய நட்புக்காக பாடுபடுவோம் என்று அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதற்கிடையில் காரைக்குடி நண்பர் முத்துராமன், திருமதி வைதேகி ஸ்ரீதரன், சமையல் கலைஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடல்களைப் பாடினர். பெய்சிங்கில் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் தமிழர் அலைன் அன்னப்பா கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை கண்டு ரசியுங்கள்.
|
|