• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-21 18:43:23    
சர்க்கரை வள்ளி கிழங்கு

cri

உலக புகாதார அமைப்பு 3 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உடல் நலத்துக்கு ஏற்ற 6 வகை உணவு பொருட்களையும் மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் பத்து வகை குப்பை உணவு பொருட்களையும் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது. உடல் நலத்துக்கு மிக சிறந்த காய்கறி, பழங்கள், இறைச்சி வகைகள், உணவு எண்ணெய், சூப், மூளை பாதுகாப்பு உணவு பொருள் முதலியவை சிறந்த உணவு பொருட்களில் அடங்குகின்றன. மக்களுக்கு மிகவும் தெரிந்த உணவான சர்க்கரை வள்ளி கிழங்கு உறுதிபடுத்தப்பட்டுள்ள 13 தலை சிறந்த காய்கறிகளில் முதல் இடத்தில் வைக்கபடுகின்றது. இன்றைய நிகழ்ச்சியில் இது பற்றி ராஜாராம், தி கலையரசி தகவல் வழங்குகின்றோம்.

கலை.............. சின்னஞ்சிறு சர்க்கரை வள்ளி கிழங்கில் எவ்வளவு சத்து இருக்கும் தெரியுமா? காய்கறிகளிலேயே மிகச் சிறந்த காய்கறியாக அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

ராஜாராம்.......... சர்க்கரை வள்ளிக் கிழங்கின் உள்ளே சமச்சீர் சத்து முழுமையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்ல உடல் நலனுக்கு துணையாக கொழுப்பை குறைப்பது, , அழகு சேர்ப்பது, புற்று நோய் தடுப்பது போன்ற பயனும் இக்கிழங்கிற்கு உண்டு.

கலை............அப்படியிருந்தால் ஆண்டுக்கு ஒரு முறை வளரும் இந்தசர்க்கரை வள்ளி கிழங்கின் மருந்து சக்தி பற்றி கூறலாமே.

ராஜாராம்..............கண்டிப்பாக. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பொட்டாசியம், இருப்பு, செம்பு,சிலெனியம், கால்சியம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான வேதியல் பண்புகள் உள்ளன. இதில் முழுமையான சத்துக்கள் மிக அதிகம். சர்க்கரை வள்ளி கிழங்கு சமச்சீர் சத்து உணவு என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

கலை...........இருந்தாலும்,சர்க்கரை வள்ளி கிழங்கு மிக இனிப்பானது. அதிகமாக தின்றால் குண்டாகி விடுவோம் என்று அழகை விரும்புவோர் பயப்படுகின்றனர். இது பற்றிய தவறான கருத்தை எப்படி மாற்றலாம்?

ராஜாராம்........... இது பற்றி கவலைபட தேவையில்லை. 100 கிராம் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் 0.2 கிராம் கொழுப்பு மட்டும் உள்ளது. அது 99 கலோரிக்கு மேலான வெப்பத்தை உற்பத்தி செய்யும். இதே அளவு எடையுடைய அரிசியில் உள்ள வெப்பத்தில் இது மூன்றில் ஒரு பகுதி மட்டுமே. இது தாழ்தவெப்ப உணவாக அழைக்கபடுகின்றது. இது மட்டுமல்ல உடம்பில் இருக்கின்ற சர்க்கரை கொழுப்பாக மாறுவதை தடுக்கும் திறன் அதற்கு உண்டு. உடல் பருமனைக் குறைத்து மழகான உடல் தோற்றத்தைப் பெற இது துணையாக இருக்கும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள நார்ச்சத்தை குடல் ஏற்பதில்லை. இதனால் குடலை மோதி இயக்கத்தை அதிகரித்து மலம் வெளியேற தூண்டுகிறது. முதியோரை பொறுத்தவரை சர்க்கரை வள்ளி கிழங்கு தின்பதால் நல்ல பலன் உண்டாகின்றது.