சீனாவில் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு
cri
இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டில் இருந்ததை விட 9.5 விழுக்காடு அதிகமாகும். முதல் மூன்று திங்களில், சீனாவின் வேளாண் உற்பத்தி சீராக இருந்தது. தொழில் உற்பத்தியும் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிலையான சொத்துக்களில் முதலீட்டு கட்டமைப்பு ஓரளவு மேம்பட்டுள்ளது. வேகமாக அதிகரித்து வரும் ஒரு பிரிவு தொழில்களில் மட்டுமே அளவுக்கு மீறி முதலீடு செய்யும் வேகம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது என்று புள்ளி விவர பணியகம் தெரிவிக்கிறது.
|
|