நிலையான சொத்துக்களுக்கான மூதலீடு
cri
இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில், சீனாவில் நிலையான சொத்துக்களில் செய்யப்பட்ட முதலீடு, கடந்த ஆண்டில் இருந்ததை விட சுமார் 23 விழுக்காடு அதிகமாகும். ஆனால், இந்த அதிகரிப்பு வேகம், கடந்த ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு குறைவாக உள்ளது என்று சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பெய்ஜிங்கில் பேசிய செய்தித்தொடர்பாளர் Zheng Jing Ping, தற்போது சீனாவில் நிலையான சொத்துக்களில் முதலீடு செய்யும் வேகம் குறைந்துள்ள போதிலும், அளவு அதிகரித்துள்ளது என்றார். இந்நிலைமையில், பொருளாதாரம் அமைதியாகவும் சீராகவும் வளர்வதற்காக, ஒட்டுமொத்த சீர்திருத்தம் மற்றும் ஒரு நிலையான நிதிக்கொள்கையை சீன அரசு தொடர்ந்து பின்பற்றி, நிலையான சொத்துக்களில் முதலீடு செய்வது அளவுக்கு மீறி அதிகரிப்பதை தடுக்கப்படும் என்றார்.
|
|