
ஏப்ரல் 17ஆம் நாள் சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்ற தேசிய சாம்பியன் பட்ட நீச்சல் போட்டியின் ஆடவர் 50 மீட்டர் மல்லாத பாணி நீச்சல் போட்டியில் சீன வீரர் ஓயாங் குன்பெங் 25. 53 வினாடி என்ற சாதனையுடன் ஆசிய சாதனையை முறியடித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானம் மற்றும் நிர்வாகம் பற்றிய சர்வதேச கருத்தரங்கும் ஒலிம்பிக் விளையாட்டு பொருளாதார சந்தை அறிமுகக் கூட்டமும் ஏப்ரல் 18ஆம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. 2005ஆம் ஆண்டு, 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான 36 போட்டி மற்றும் பயற்சி அரகங்களின் கட்டுமானம் ஏற்கனவே துவங்கிவிட்டது. அல்லது விரைவில் துவங்கவுள்ளது.

48வது உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டிக்கான ஆயத்தப் பணியை கண்டு தாம் மிகவும் மனநிறைவு அடைவதாக சர்வதேச மேசைப் பந்து சம்மேளனத்தின் தலைவர் ADHAM SHARARA ஏப்ரல் 17ஆம் நாள் தெரிவித்தார். பந்தயத்தை நடத்தும் நாடான சீனாவின் ஷாங்கை மாநகரம் இந்த போட்டியை சரிவர நடத்தும் என்ற முழு நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 48வது உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி ஏப்ரல் 30ஆம் நாள் துவங்குவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது WANG CHAO கோப்பைக்கான கோல்பு போட்டி ஏப்ரல் 17ஆம் நாள் சீனாவின் சென்சென் நகரில் நடைபெற்றது. ஆசிய இணைப்பு அணி, 14.5-9.5 என்ற புள்ளிக்கணக்கில் அறுதி மேம்பாட்டுடன் ஜப்பானிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சீனாவின் முதல் இலக்க வீரர் சாங் லியன் வெய் இப்போட்டியில் ஆசிய இணைப்பு அணிக்காக மிக அதிக புள்ளியை பெற்று தந்தார்.
2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்சிங் மாநகரின் நிர்மாணம் மற்றும் வளர்ச்சிக்கு அறிவு ரீதியான ஆதரவளிக்கும் வகையில், வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த உயர்நிலை பொருளாதார ஆலோசகர்களை வரவழைத்துள்ளதாக பெய்சிங் மாநகர அரசாங்கம் ஏப்ரல் 18ஆம் நாள் அறிவித்தது. பெல்ஜியம், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த ஐந்து நிபுணர்களும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அரங்கங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம், நிர்வாகம், போட்டிக்குப் பின்னர் அரங்கங்களை பயன்படுத்தும்முறை, ஒலிம்பிக் விளையாட்டுத் திட்டம், பெய்சிங் மாநகரின் வளர்ச்சி முதலிய துறைகளில் அவர்கள் பெய்சிங் மாநகர அரசாங்கத்துக்கு முன்மொழிவுகளையும் யோசனைகளையும் தெரிவிப்பர்.
|