
இலக்கைச் சுடும் போட்டி 2005ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான இலக்கைச் சுடும் போட்டியின் தென் கொரிய சுற்று ஏப்பரல் 16ஆம் நாள் நிறைவடைந்தது. சீன அணி, 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றது. மகளிருக்கான பத்து மீட்டர் AIR ரைபில் துப்பாக்கிச் சூட்டில் சீன வீராங்கனை சௌ யிங்ஹுய்யும், ஆடவருக்கான பத்து மீட்டர் AIR கைத்துப்பாக்கிச் சூட்டில் சீன வீரர் தன் சோங்லியங்கும், சாம்பியன் பட்டம் பெற்றனர். ஆடவருக்கான கைத்துப்பாக்கி விரைவுச் சூட்டில் சீன வீரர் யாங் துங்மிங் முதலிடம் பெற்றார். மகளிருக்கான இரண்டு திசையில் பறக்கும் தட்டைச் சுடும் போட்டியில் சீன வீராங்கனை வெய் நிங் சாம்பியன் பட்டம் பெற்றார்.

வாள் வீச்சு போட்டி 2005ஆம் ஆண்டு சீனாவின் தேசிய வாள் வீச்சு போட்டியின் இறுதிப் பந்தயம்ஏப்ரல் 17ஆம் நாள் வட சீனாவிலுள்ள தியன்சின் நகரில் நடைபெற்றது. மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் குவாங்துங் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை ஹுவாங் ஜியாலிங்,15-7 என்ற புள்ளிக்கணக்கில் கியாங்சு மாநில அணியின் லியூ யுவானை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜூட்டோ 2008ஆம் ஆண்டு ஆசிய ஜுட்டோ சாம்பியன் போட்டியை நடத்த விண்ணப்பிப்பதென தென்கொரியா முடிவு செய்துள்ளதாக தென்கொரிய ஜூட்டோ சங்கம் ஏப்ரல் 17ஆம் நாள் அறிவித்தது. ஆசிய ஜட்டோ ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் இந்த போட்டியை நடத்த தென்கொரியா மட்டுமே விண்ணப்பிக்கிறது.
டென்னிஸ் ஏப்ரல் 17ஆம் நாள் மொன்ட்காரோ மாஸ்டர் டென்னிஸ் போட்டி நிறைவடைந்தது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் 18 வயதான ஸ்பெயின் இளம் வீரர் RAFAEL NADAL 3-1 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டின வீரர் GUILLERMO CORIA ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். இதனால் CORIA கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்றுவரும் மாஸ்டர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற மிக இளைய வீரராக விளங்குகின்றார். இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைகின்றன.
மாரத்தான் 25வது லண்டன் மாரத்தான் நெடுந்தூர ஓட்டப் போட்டி ஏப்ரல் 17ஆம் நாள் நடைபெற்றது. சீனாவின் புகழ்பெற்ற வீராங்கனை சுன் யிங் ஜே தன் திறமையை சரிவர வெளிப்படுத்த தவறியதால் முதல் பத்து இடங்களில் நுழையவில்லை. பிரிட்டனின் புகழ் பெற்ற வீராங்கனை PAULA RADCLIFFE இறுதியில் 2 மணி 17 நிமிடம் 42 வினாடி என்ற சாதனையுடன் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார். கெனிய வீரர் MARTIN LEL 2 மணி 7நிமிடம் 26 வினாடியில் தூரத்தை ஓடிமுடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்
|