• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Apr 5th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-25 14:56:04    
நேயர் நேரம்91

cri
முதலில், அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம். திரு N.கடிகாச்சலம் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த அருமையான நிகழ்ச்சி, பல நேயர்களால் வரவேற்கப்பட்டது.

--இந்த நிகழ்ச்சி, நல்ல பல பயனுள்ள கருத்துக்கள் தாங்கி வந்தது. இன்றைய அறிவியல் உலகம் H.I.V.நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரை வழங்குவதை பற்றியும் அவர்களுடைய செயலையும் உடல் நலத்தையும் கவனித்து வருகிறது என்ற செய்தியும் அறிந்தேன். தலைவலி உள்ளவர்களைப் பற்றி, கூறப்பட்டது. பல வகையான தலைவலிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் பருகுவதால் தலைவலி குறைய வாய்ப்பு உள்ளதைப் புரிந்து கொண்டேன் என்கிறார் ராசிபுரம், B.வெங்கடேஷ்.

--அதிக மகசூல் தரும் வீரிய ரகமான, துவரை, பருத்தி பற்றியும், தலைவலி பற்றியும், இதய நோய்கள் குறித்தும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதய நோயை அலட்சியப்படுத்தக் கூபிது என்பதையும் தூக்கத்தின் அவசியத்தையும் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அறிந்து பயன் அடைந்தோம் என்று, மீனாட்சிபாளையம் கே.அருண் தெரிவித்தார்.

--இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், இந்தியாவில் புதிய வகை கோதுமை ரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பற்றியும், அதனுடைய தன்மை, விளையும் நாட்கள் பற்றியும் கூறக்கேட்டேன், என்கிறார் நெய்வேலி, A.M.சுப்ரமணியன்.

--திரு கடிகாசலம் வழங்கிய அறிவியல் உலகம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள செய்தியாகும். இன்றைய குழந்தைகளின் பிரச்சினைகளையும் சரிவர உறக்கம் இல்லாத காரணம் என்ன என்பதையும் தெளிவாக அறிய முடிந்தது. ஒரு குழந்தை, குறைந்தது 14 மணி நேரம் உறங்க வேண்டும் என்றும், அதில், உறக்கம் குறையும் போது, பள்ளியில் படிப்பில் கவனம் செலுத்த முடியாது மற்றும் பிற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது என்றும் அறிய முடிந்தது என்கிறார், திருச்செங்கோடு, A.புவனேஸ்வரன்.

எமது ஒலிபரப்பு நேரம் ஒரு மணியாக அதிகரித்த பின், நாள்தோறும் இரண்டு செய்தித்தொகுப்புகள் ஒலிபரப்பப்படுகின்றன. உலகளவில் நிகழ்ந்த முக்கிய செய்திகள் பற்றி நாங்கள் விரிவாக அறிவிக்கின்றோம்.

--சீனாவின் கலைவிழா பற்றிய செய்தித்தொகுப்பைக் கேட்டேன். இதில், பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புறப்பாடல்கள், கலை இலக்கியம் சிறந்த படைப்புகளுக்கு சீன அரசு விருதினை வழங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி சீனாவின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கான செயல் என எண்ணுகிறேன். பயனுள்ள நிகழ்ச்சி இது என்று, சேந்தமங்கலம் G.சிவக்குமார் கருத்து தெரிவித்தார்.

--சீன தேசிய கலை விழா, சீன மக்களின் பண்பாட்டை விளக்குகிறது. சீன மக்களின் பொது பண்பாட்டு வாழ்க்கையின் வடிவமாகவும், இக்கலை விழா நிகழ்கிறது. கலைவிழாவில், கலைஞர்களுக்கு பல பரிசுகளும், விருதுகளும் பாராட்டும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை, அறிந்து கொண்டோம். சீன மக்களுக்கு இக்கலை விழா மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார், விஜயமங்கலம், குணசீலன்.

சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியைக் கேட்ட போது, சீனாவின் புகழ்பெற்ற இயற்கை காட்சித்தலங்களையும் வரலாற்று சிறப்பிடங்களையும் நேரில் சென்று பார்த்தது போன்று இருந்தது என்று நேயர்கள் பலர் தெரிவித்தனர்.

--இந்த நிகழ்ச்சியில், சூ சு நகர பூங்காக்களுக்கு மேற்கொண்ட பயணம், சீனாவின் இயல்பான இயற்கை சூழலையும், பாரம்பரிய மிக்க 2500 ஆண்டு கால பண்பாட்டினையும் அறிய துணையாக இருந்தது. நான், எப்போதுமே, சீனாவை சுற்றுலாவின் சொர்க்க பூமி என்றே கருதி வருகிறேன். அது மெய்ப்பட்டு வருகிறது. இப்போது, இடத்தில் உள்ள சீனா விரைவில் முதலிடத்தை பெறும் என உறுதியாக நம்புகின்றேன் என்கிறார் மணமேடு M.தேவராஜா.

--இதில், SU ZHOU இயற்கை காட்சி தலத்தை இன்று, பார்வையிட்டோம். இலையுதிர்காலத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும் இலைகளை கொண்ட, மரங்கள் நிறைந்த, ஷென் நோன் மலையையும், இரு புறமும் கரடு முரடான பள்ளத் தாக்குகளை கொண்ட, பைசுங் மலையையும் கண்டுகளித்தோம். நீண்ட ஆயுளின் சின்னமாக விளங்கிடும் தேவதாரு மரங்களின் நிழலில் சற்று நேரம் ஒய்வெடுத்தோம் என்கிறார் செல்லூர் N.சீனிவாசன்.

--இந்நிகழ்ச்சியில், குவாங்சோ மாநகரம் என்ற கட்டுரையைக் கேட்டேன். மலர் உலகம் என செல்லமாக அழைக்கப்படும் குவாங்சோ மாநகரம் பற்றிய சுவையான பல்வேறு செய்திகளை அறிந்து மகிழ்ந்தேன். 2001ம் ஆண்டில் சர்வதேச பூங்கா நகரமாக இந்நகரம் தெரிவு செய்யப்பட்டது என்ற செய்தியிலிருந்தே அதன் சிறப்பை முழுவதுமாக உணர்ந்து கொள்ள முடிகிறது என்கிறார், வளவனூர் புதுப்பாளையம் S.செல்வம்.

--இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை.வின்னா மாநிலம் மற்றும் அதில் அடங்கியுள்ள கிராமம் பற்றியும் மக்கள் தொகை மற்றும் இயற்கை வளம் பற்றியும், திருமணம், ஈழச்சடங்கு மருத்துவ முறை, மத நம்பிக்கை பயிர்செய்வது பொன்ற நிகழ்வுகள் குறித்து குறிப்பிட்ட தொகுப்பு மிகவும் அருமை என்கிறார், பாண்டமங்கலம், P.R.கார்த்திகேயன்.

நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், பயன் மிக்க தகவல்களைப் பெறலாம் என்று பல நேயர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி பற்றி நேயர்களின் கருத்துக்களை கேளுங்கள்.

--நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் மன நல ஆலோசனைகளை அறியத் தருமாறு, பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நான், தவறாமல் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை செவிமடுத்து வருபவன் என்று, ஈரோடு, M.C.பூபதி தெரிவித்தார்.

--புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீங்குங்களை, வரிசைப் படுத்தினிர்கள் நுளரயிரம் நோய், இதய நோய் போன்ற நோய்களுக்கு புகைப் பிடிப்பதுதான் காரணம் என்றும், புகைப்பிடிப்பவர்கள் தடுக்கும் வகையில், சீனாவில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் வரவேற்க வேண்டியவை என்கிறார் புதுச்சேரி, B.தெய்வா.

--நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், சர்க்கரை நோய் கட்டுப்படுத்துதலில் கூடுதலாக செய்தி என்று தலைப்பிட்டு சர்க்கரை சத்து மிகவும் குறைவாக உள்ள முட்டை கோஸ், கேரட், பூகறி, தக்காளி அதிகம் சாப்பிடலாம் என்று தகவல் வழங்கியமைக்கு நன்றி என்று, விழுப்புரம், S.பாண்டியராஜன் தெரிவித்தார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040