வட்டம் மற்றும் பேரூர் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி
cri
இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில், சீனாவில் வட்டம் மற்றும் பேரூர்த் தொழில் நிறுவனங்கள் சீராக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இத்தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள லாபம், 22 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும் என்று சீன வேளாண் துறை அறிவித்துள்ளது. இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில், இத்தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 17 விழுக்காடு அதிகமாகும். இது இத்தொழில் நிறுவனங்களின் விரைவான வளர்ச்சியை குறிப்பிடத்தக்க அளவுக்கு விரைவுபடுத்தியுள்ளது.
|
|