• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-26 15:25:57    
நேயர் நேரம்92

cri
ரா-----எஸ். நாட்டாமங்கலம் நேயர் ஏ மாதுராஜ் கடந்த 30-12-2004 நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். அன்றைய தினம் நலவாழ்வுப்பாது. காப்பு நிகழ்ச்சியில் அரியாக்கவுடன்டன் பட்டி ஏ என் இளங்கோவன் கண்ணில் செய்யப்படும் லாஸிக் லேசர் சிகிச்சை பற்றி கூறியது பயனுள்ளதாக இருந்தது. அடுத்து குடல்புண்ணைத் தவிர்க்கும் வழிமுறைகளை பாண்டமங்கலம் நேயர் எம், தியாகராஜன் கூறினார். நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி பயனுள்ள பல தகவல்களைத் தருகிறது என்று கூறிகிறார். கடந்த ஜனவரி 6ம் நாள் ஒலிபரப்பான நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு வைட்டமின்கள் அவசியம் பற்றி ராஜாராம் கலையரசி கூறியது அறிவியல் வகுப்பு நடத்தியது போல் இருந்தது என்கிறார் பரசலூர் பி எஸ் சேகர். வி------பாராட்டுக்களுக்கு நன்றி நேயர்களே. ரா------இலங்கை புதிய காத்தாங்குடி நேயர் பாத்திமா ஷிபானா கடந்த ஜனவரி திங்களில் எழுதிய கடிதம், கடல் கொந்தளிப்பால் உற்றார் உடிவினை இழந்து அல்லல்படும் எங்களுக்கு மனக்கலக்கத்தின் போது புத்துணர்ச்சி ஊட்டுவதாக சீன வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். வி-------எண்ணாற்ற முகம் தெரியாத நேயர்களுடன் மனமாற உணரயாடி ஹவாடுவதும், எங்கள் பேச்சு உங்களுக்கு நிம்மதி தருவதும் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. பாராட்டுக்கு நன்றி. ரா--------மதுரை செல்லூர் நேயர் எண் சீனிவாசன் கடந்த பிப்ரவரி 6ம் நாள் கடிதத்தில் விளையாட்டுச் செய்திகள் மூலம் கடந்த வாரத்தில் விளையாட்டு உலகில் சீன பெற்ற மாபெரும் வெற்றிகள் பற்றி அறிந்து கொண்டேன். கால்பந்து மற்றும் உறைபனிச் சறுக்கல் போட்டி போன்றவற்றிலும் சீன முன்னேற்றம் கண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. கடந்த காலங்களில் சீனாவிற்கு அதிகம் வெற்றி தராத இது போன்ற விளையாட்டுக்களிலும் தீவிரமாக பயிற்சி செய்து வெற்றிகளைக் காண்பது எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது. அனைத்துப் போட்டிப் பிரிவுகளிலும் வெற்றி கண்டால் எதிர்காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு வரும் வாய்ப்பு சீனாவிற்கு உண்டு எனவே கடுமையாக முயற்சிக்கு வேண்டும் என்று எழுதியுள்ளார். வி------நம்பிக்கை வீணாகாது. எடுத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் சீன விளையாட்டு வீரர்களுக்கு உண்டு. இந்த நல்ல நம்பிக்கையோடு இன்றைய நேயர் நேரத்தை நிறைவு செய்வோம். வணக்கம்.