• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-28 15:22:59    
சன்சன் குவாஞ்சோ செழுமை கருத்தரங்கின் விருப்பம்

cri
செய்தியாளர்...கருத்தரங்கில் கலந்து கொள்ளும் போது விண்ணப்பம் செய்பவர் கருத்தரங்கிற்கு 5000 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். இப்படி இருந்தால் கருத்தரங்கு நடத்துவதால் நல்ல லாபம் கிடைக்கும் அல்லவா?

பிர்மைன்...இந்த கட்டணத்தில் துணைவியாரின் செலவு அடங்கும். கருத்தரங்கு நடைபெறும் போது துணைவியார்களுக்காக சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்வோம். சீனாவின் பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றை மேலும் அறிந்து கொள்ள நாம் அவர்களுக்கு உதவுவோம்.

கருத்தரங்கில் 400 முதல் 600 பேரை கலந்து கொள்வார்கள் என மதிப்பிட்டுள்ளோம். வருமானத்தை பார்த்தால் இந்தக் கருத்தரங்கு நடத்துவதற்கு செலவு மிகவும் அதிகமாகும். 14 வாரங்களில் புதிய நிறுவனத்தை ஏப்படுத்துவதற்கு எவ்வளவு செலவு அதிகமாகும் என்று நினைத்துப் பாருங்கள். ஆகவே "செல்வம்"என்பதை பற்றி பிரசாரம் செய்து உலகத்தின் கொள்கை வரைவாளர்கள் அனைவரும் தொடர்பு கொள்ள ஒரு வாய்பை வழங்குவது இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.

செய்தியாளர்...இவ்வளவு அதிகமான பிரதிநிதிகள் பெய்சிங் நகருக்கு என்ன கொண்டு வருவார்கள்?

பிரிமைன்...உலகளவிலான பெரிய தொழில் குழுமங்களின் தலைமை இயக்குனர்கள் உலகமயமாக்கத்தை நனவாக்கும் நோக்கம் மற்றும் அனுபவத்தை கொண்டு வருவார்கள். புதிய சீன தலைமைக்கும் சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கும் புரிந்துணர்வையும் பரிமாற்ற வாய்ப்பையும் வழங்குவார்கள்.

செய்தியாளர்...சீனாவில் நான்காவது முறையாக கருத்தரங்கு நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படுமா?அப்படியிருந்தால் சீனாவின் எந்த நகரம் தேர்ந்தெடுக்கப்படும்?

பிர்மைன்...கண்டிபாக நடத்தப்படும் என்று நான் நினைக்கின்றேன். உலகில் பல நகரங்கள் கருத்தரங்கு நடத்துமாறு என்று எங்களை அழைத்துள்ளன. ஆனால் செல்வம் கருத்தரங்கு சீனாவில் மீண்டும் நடைபெறுவது உறுதி. ஏன்னென்றால் சீனா மிகவேகத்துடன் வளர்ந்து வருகின்றது. பல பல வளரும் நகரங்கள் பெருகிவருகின்றன. உதாரணமாக சன்சுன், குவாஞ்சோ ஆகிய நகரங்கள் கவனத்தை ஈர்க்கும் சர்வதேச நகரங்களாக விளங்குகின்றன. அவற்றுக்கு செல்வம் கருத்தரங்கு நடத்தும் சக்தி உண்டு.

செய்தியாளர்...இந்த கருத்தரங்கில் உலகமயமாக்கப் போக்கில் செய்தி ஊடகம் எந்த பொறுப்பு ஏற்பது பற்றி குறிப்பாக விவாதிக்கப்படுமா? இது பற்றி தங்கள் கருத்து என்ன?

பெஃத்ரெ...உலகமயமாக்கப் போக்கில் இந்த நிறுவனம் என்ன செய்யும் என்பது பற்றி அறிய அனைவருக்கும் ஆவல். பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற மக்கள் மேன்மேலும் சீரான வாழ்க்கை வாழ செய்யும் வகையில் செய்தி ஊடகம் வணிக பொருட்கள் பல்வேறு நாடுகளில் விற்கப்படுவது பற்றியும் மேலும் கூடுதலான செல்வம் எப்படி உருவாக்குவது என்பது பற்றியம் அறிவிக்க வேண்டும். இது மட்டுமல்ல பண்பாட்டு பரவல் பற்றியும் பிரச்சாரம் செய்ய வேண்டும் பண்பாட்டு புரவலுக்கு மிக பெரிய தனிச்சிறப்பு உண்டு. உலகின் எங்கெக்கும் வாழ்கின்ற மக்களை ஒன்றிணைக்கும் சக்தி பண்பாட்டுப் பரவலுக்கு உண்டு. ஆகவே, இதனால் நாம் வாழ்கின்ற உலகம் சிறிய கிராமமாக மாறலாம். பல்வகை மொழிகளில் பேசும் மக்களிடையில் தடுப்பு இல்லாமல் போகும்.

சீன நிறுவனங்கள் பற்றியும் சீனாவுடன் வியாபாரம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் பற்றியும் அறிவிப்பதன் மூலம் இன்றைய யுகத்தில் சீனாவை நடைமுறை நிலைமை பற்றி பிரச்சாரம் செய்ய விரும்புகின்றோம்.

செய்தியாளர்...சீன செய்தி ஊடகம் இத்துறையில் என்ன பொறுபு ஏற்க வேண்டும்?

பெஃத்ரெ...பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் பின்வரும் கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். அதாவது தன்னை நம்பகமான சக்தி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொய் செய்தி மற்றும் விளம்பரம் எப்போதும் இல்லை என்று கூறும் துணிவு வேண்டும். இல்லாவிட்டால் சமூகத்திலிருந்து மதிப்பு பெற முடியாது. சீனா வளரும் தருணத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் அறிந்து கொள்வதை அதிகரிக்க வேண்டும். பொதுக் கண்காணிப்புக்கு கருத்துக்களைத் திரட்டும் பொற்ப்பை செய்தி ஊடகம் ஏற்க வேண்டும்.

செய்தியாளர்...சீன வாசகர்களுக்கு ஒரு வாக்கியம் பேசுங்கள்.

பெஃத்ரெ...இன்றைய உலகம் சீனாவுக்கு உரியது. இதன் பெருமை உங்களுக்கு சாரும். இதை நன்றாக மதிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.