வணக்கம் நேயர்களே, 听众们,你们好!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களைச் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று இரண்டாம் பாடத்தின் ஏழாவது பகுதியைப் படிக்கின்றோம்.
முதலில் கடந்த முறை படித்தறிந்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.
你是哪国人?அதாவது 你是哪个国家的人?
நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இங்கு 哪个என்றால் எந்த என்பது பொருள், 国家என்றால், நாடு என்பது பொருள். இரண்டும் சேர்ந்தால் 哪个国家 இதன் தமிழாக்கம், எந்த நாடு என்பதாகும். 哪个国家 என்பதை சுருக்கமாக சொன்னால் 哪国 என்று சொல்லுவது வழக்கம். 人 என்றால் ஆள், அல்லது மனிதன் என்பது பொருள். 是 என்றால் இரு என்பது பொருள், ஆங்கில மொழியிலுள்ள ARE, IS போல.
இப்பொழுது என்னுடன் சேர்ந்து இந்த வாக்கியத்தை படியுங்கள்.
இனி, ஒரு சிறு உரையாடலை பார்ப்போம்.
请问,您是哪国人?
நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
我是印度人,您呢?
நான் இந்தியர், நீங்கள்
我是中国人。
நான் சீனர்.
இங்கு 印度 என்றால் இந்தியா, 中国 என்றால் சீனா,印度人 என்றால் இந்தியர், 中国人 என்றால் சீனர். இவை அனைத்தும் நமது நேயர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததே என்று நான் நம்புகின்றேன்.
இப்பொழுது இந்த உரையாடலை என்னுடன் சேர்ந்து படியுங்கள்
请问,您是哪国人?
我是印度人,您呢?
我是中国人。
இப்பொழுது ஒரு புதிய வாக்கியத்தைப் படிக்கின்றோம்.
我来介绍一下, 这位是。。。
நான் அறிமுகம் செய்ய அனுமதியுங்கள், இவர்....
இங்கு, 来 (LAI)என்றால் வா என்பது பொருள். இந்தச் சொல் பொதுவாக எழுவாய்க்குப் பின் தான் வரும். 介绍 என்றால் அறிமுகம் என்பது பொருள். 这位 என்றால் இவர் என்பது பொருள். 那位 என்றால் அவர் என்பது பொருள்.
இப்பொழுது ஒரு உரையாடலைக் கேளுங்கள்.
A.我来介绍一下,这是我的朋友小王。
நான் அறிமுகம் செய்கின்றேன். இவர் எனது நண்பர் சியோ வாங்.
B.你好,小王!很高兴认识你。
வணக்கம் சியொ வாங், உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
சீன வழக்கத்தின் படி, தன்னைவிட வயது குறைந்தவரை அழைக்கும் போது, 小 என்ற சொல்லுக்குப் பின் குடும்பப் பெயரைச் சேர்த்து அழைக்கலாம். ஒருவரின் குடும்ப பெயர் சாங் என்றால், அவரை 小张 என்று அழைக்கலாம். இது போல, தன்னைவிட வயது கூடுதலானவரை அழைக்கும் போது, 老 என்ற சொல்லுக்குப் பின் அவரின் குடும்பப் பெயரை சேர்த்து அழைக்கலாம். ஒருவரின் குடும்பப் பெயர் 赵 என்றால், அவரை 老赵 என்று அழைக்கலாம்.
இப்பொழுது இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்
A.我来介绍一下,这是我的朋友小王。
B.你好,小王!很高兴认识你。
இந்த உரையாடலை மீண்டும் கேளுங்கள்
A.我来介绍一下,这是我的朋友小王。
B.你好,小王!很高兴认识你。
நேயர்களே, இன்றைய பாடம் சற்று கஷ்டமாக இருக்கின்றது. பரவாயில்லை. பாடத்துக்குப்பின் தாங்கள் அதிகமாக பயிற்சிச் செய்யுங்கள். எங்கே புரியவில்லை என்றால் என்னுடன் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். நாம் மீண்டும் ஒரு முறை படிக்கலாம்.
|