
ஒலிம்பிக் பற்றி அண்மையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற் குழுக் கூட்டத்தில் பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு கமிட்டியின் துணை நிர்வாகத் தலைவர் வாங் வெய் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் பற்றி விளக்கினார். இந்த ஆயத்தப் பணிகளில் சீன அரசு மிகுந்த கவனம் செலுத்துகின்றது. சீன அரசு மற்றும் மக்களின் ஆதரவுடனும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இக்கமிட்டியின் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் வழிகாட்டலிலும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகள் சீராக நடைபெற்றுவருகின்றன என்றார்.

ஊக்க மருந்து எதிர்ப்புப் பணி அடுத்த சில ஆண்டுகளில், ஊக்க மருந்து எதிர்ப்பு பணியை சீனா தீவிரப்படுத்தும் என்று சீன ஒலிம்பிக் கமிட்டியின் ஊக்க மருந்து எதிர்ப்பு கமிட்டியின் அலுவலகத்தின் பொறுப்பாளர் ஷி காங் செங்史康成 கூறியுள்ளார். ஊக்க மருந்து பரிசோதனை செய்யும் தடவைகளை தற்போது இருப்பதைவிட 60 விழுக்காடு சீனா அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற இரண்டாவது ஆசிய வட்டார அரசுகளுக்கிடையிலான ஊக்க மருந்து எதிர்ப்பு கூட்டத்தில், சீன இத்துறையில் பெற்றுள்ள சாதனையை உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ஹோர்மன் பாராட்டினார். சீன நாட்டில் ஊக்க மருந்து பரிசோதனையின் தடவையும் தரமும் இடைவிடாமல் அதிகரித்துவருகின்றது. ஊக்கமருந்து எதிர்ப்பு துறையில் சீன அரசு ஆக்கப்பூர்வமான வாக்குறுதி அளித்துள்ளது. 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 150க்கும் அதிகமான சீன வீரர்களில் எவரும் விதியை மீறவில்லை.

தடகளப் போட்டி ஏப்ரல் திங்கள் 24ஆம் நாள் நடைபெற்ற சீனத் தடகளப் போட்டியின் சுங் சன் நகரச் சுற்றில் புகழ் பெற்ற சீன வீரர் லியூ சியாங் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் 13.23 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். இது இவ்வாண்டு இந்த நிகழ்ச்சியில் உலகில் மிக சிறந்த சாதனையாகும்.
கோல்பு JOHNNIE WALKER CLASSIC கோல்பு போட்டி 24ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலிய வீரர் ADAM SCOTT 270 புள்ளிகளை பெற்று 9வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார். இந்தப் போட்டியின் பரிசு தொகை 23 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலராகும். மொத்தம் 155 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
|