
உலக சர்வதேச சதுரங்க மகளிர் நட்சத்திரங்கள் போட்டி ஏப்ரல் 19ஆம் நாள் கிழக்கு சீனாவின் ஜினான் நகரில் நிறைவடைந்தது. சீனாவின் புகழ்பெற்ற வீராங்கனை ச்சு ஹுவான் 11 ஆட்டங்களில் 8.5 புள்ளிகளைப் எடுத்து இரண்டாம் இடம் பெற்றார். சாம்பியன் பட்டம் பெற்ற அமெரிக்காவின் சிறப்பு சர்வதேச சதுரங்க மாஸ்டர் ANNA ZATONSKIN ஐவிட இது 0.5 புள்ளி மட்டும் குறைவாகும்.
கார் ஓட்டப் போட்டி 2005ஆம் ஆண்டு உலக F1 கார் ஓட்டச் சாம்பியன் பட்டப் போட்டியின் சன்மாலிநோ பரிசு போட்டி ஏப்ரல் 24ஆம் நாள் நிறைவடைந்தது. RENAULT அணியின் வீரர் FERNANDO ALONSO ஒரு மணி 27 நிமிடம் 41.921 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். புறப்பட்ட போது, சாதகமற்ற நிலையில் இருந்த FERRARI அணியின் வீரர் MICHAEL SCHUMACHER திறமையுடன் ஓட்டினார். அவர் 0.215 வினாடி வித்தியாசத்துடன் இரண்டாம் இடம் பெற்றார். இதுவும் இந்த போட்டி பருவத்தில் அவருடைய மிக சிறந்த சாதனையாகும்.

சீனாவின் முதலாவது சர்வதேச சதுரங்க தொழில் முறை போட்டி ஏப்ரல் 20ஆம் நாள் ஜினான் நகரில் அதிகாரபூர்வமாக துவங்கியது. மகௌ அணி உட்பட, மொத்தம் 19 அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன. சீனாவில் இத்தகைய போட்டி நடைபெறுவது, சீனாவின் சர்வதேச சதுரங்க வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இது இளம் வீரர்களுக்கு மேலும் அதிக வாய்ப்பை வழங்கியுள்ளது மட்டுமல்ல, சர்வதேச சதுரங்க விளையாட்டில் சீனாவின் வளர்ச்சியையும் முன்னேற்றுவிக்கும் என்று சீனச் சர்வதேச சதுரங்க சங்கத்தின் தலைமை செயலாளர் யே ச்சியாங் ச்சுவான் கூறியுள்ளார்.
கூடைப் பந்து சீனாவில் ஏப்ரல் திங்கள் 24ஆம் நாள் நடைபெற்ற ஆடவருக்கான C B Aகூடைப் பந்து போட்டியில் குவாங்துங் மாநில அணி 107-99 என்ற புள்ளிக் கணக்கில் ஜியாங்சு மாநில அணியைத் தோற்கடித்து இந்த போட்டியின் ஒட்டு மொத்த சம்பியன் பட்டம் பெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் 14ஆம் நாள் துவங்கிய இப்போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்துகொண்டன.
தென்னிஸ் ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் போர்த்துக்கலின் எஸ்தோரி நகரில் நடைபெற்ற ஏதென்னிஸ் ஒப்பன் போட்டியில் உலக பெயர் வரிசையில் 40ஆம் இடம்பெற்ற சீன வீராங்கனை லி நா 2-1 என்ற செட் கணக்கில் பிரெஞ்சு வீராங்கனை ஆலோலோவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் அவர் ஆஸ்திரேலிய வீராங்கனை பிராட்டுடன் மோதுவார். உலக பெயர் வரிசையில் 69ஆம் இடம் பெற்ற சீன வீராங்கனை செங் ஜே 2-1 என்ற செட் கணக்கில் ஸ்லோவாக்கியாவின் நோக்கேயேவாவைத் தோற்கடித்து அடுத்த சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள தகதி பெற்றார். அவர் ஜெர்மனியின் வீராங்கனை முலேயுடன் போட்டியிடுவார்.
|