• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-29 09:27:51    
பாராட்டுகள்

cri
வி-------வணக்கம் நேயர்களே. நேயர் நேரத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பது. ரா-------ராஜாரம் வி---------விஜயலட்சுமி ராஜா இந்த வாரம் எண்என்ன்ன கடிதங்கள். ரா-------பெரம்பலூர் மாவட்டம் உத்திரக்குடி நேயர் சு கலைவாணன் ராதிகா தமது பிப்ரவரி திங்கள் கடிதங்களில் நமது பல நிகழ்ச்சிகளை பாராட்டியுள்ளார். குறிப்பாக பிப்ரவரி 15ம் நாள் அன்றைய சீன பண்பாடு நிகழ்ச்சியில் ராஜாராம் கூறுகையில் ஒரு மனிதனுக்கு மொழி என்பது தகவல் தொடர்புக்கு முக்கியம் ஆனால் அதுவே அடிமையாக மாறி விடக்கூடாது என்பதையும் சீனாவில் பல மாணவர்கள் பள்ளிகளில் ஆங்கில மொழி கற்கின்றனர். தொகுப்பு ஆங்கில பயிற்சி 4 ஆண்டுகள் என்பதையும் சீன மொழி 7 கிளை மொழியாக இருக்கிறது என்பதை தெளிவாக தமிழ்-சீன மொழிகளை ஒப்பிட்டு கூறினார். நன்றிகள். பிப்ரவரி திங்கள் 17ம் நாள் நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் அனைவரின் வீட்டிலும் அழகுக்காக இருக்கும் செய்பருத்தி செடி ஆனால் அவற்றஇன் பயன்கள் எவருக்கும் தெரியாமல் இருந்தது. நமது நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி கேட்ட பிறகு வாதம் பித்தம் கபம் இவற்றிற்கு மாமருந்து செம்பருத்தி பூ பயன்படுகிறது என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதை கேட்ட பிறகு காலையில் ஒரு பூவும் மாலையில் ஒரு பூவும் சாப்பிட துவங்கி விட்டோம். இனி இருதய நோய்க்கு டாடா காட்டி விடலாம். வழங்கிய சித்த மருத்துவர் பா அர்ச்சுணன் அவர்களுக்கும் பி கண்ணன் சேகருக்கும் நன்றி. தமிழ் மூல சீனம் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். நிகழ்ச்சியில் உரையாடலாக கேட்டு கற்று கொள்வதை விட இரண்டாம் பாடத்தில் புதிய சொற்கள் அவற்றின் உள்ளடக்கத்தில் 27 வார்த்தைகளை கேட்டு கேட்டு எங்கல் மனதில் பதிந்து விட்டது. அந்த பாடத்தை தட்டச்சு செய்து எங்களுக்கு அனுப்பினால் இன்னும் மேலும் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும். வி--------பாராட்டுக்களுக்கு நன்றி. தமிழ் மூலம் சீனம் கற்க குறிப்பு புத்தகம் அனுப்பத் தொடங்கி விட்டோம். பல நேயர்களுக்கு இடைத்திருக்கும் என நம்புகிறோம். ரா--------நலவாழ்வுப் பாதுகாப்பு, அறிவியல் உலகம் நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். புதுவை நேயர் என் பாலகுமார். நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி ஜனவரி 20ம் நாள் ஒலிபரப்பானது. நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் புகை பிடித்தல் பற்றி நண்பர் கா செந்தில் கூறியதில் இன்னும் அதிகமாக சொல்லி இருக்கலாம். புகை பிடிப்பது ஆண்மைக்கு அழகாகவும், ஆடம்பரத்தை வெளஇபடுத்துவதாகவே இருக்கிறது. நான்கு பேர் புகை பிடிப்போர் நடுவில் புகை பிடிக்காமால் இருந்தால், புகை பிடிக்காதவருக்கு தான் அதிக பாதிப்பு என்பதை நேயர்கள் உணர்ந்து செயல்பாட வேண்டும் புகை பிடித்தல் பற்றஇ தமிழ் ஒலிபரப்பில் பல கட்டுரைகள் வந்துள்ளது. இதன் மூலம் நேயர்களை விழிப்புடன் இருக்க வைக்கிறது எனது பாராட்டுகள்.