அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ராமணுக்கள் செய்யும் மாயம் என்ற கட்டுரை வாயிலாக மரமணுக்கள் என்றால் என்ன என்பதை அனைத்துத்தரப்பு மக்களுக்கு புரியும்படியாக கூறினீர்கள். விஞ்ஞான வளர்ச்சியினால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. தாய்லாந்தில் சுனாமியினால் இறந்தவர்களை அடையானம் காண சீனா மீட்பு குழுவிகனர் செய்ய உள்ள மரமணு சோதனை சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. வி-------பாராட்டுக்கு நன்றி. ரா-------பெரிய காலாப்பட்டு நேயர் பி சந்திர சேகரன் நமது ஜனவரித் திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். சீன வானொலி எனக்கு ஒரு சிறந்த நான்பனாக விளங்கி வருகிறது. நான் உலகத்தில் நடைபெறும் அனைத்து விதமான செய்திகளையும் நிகழ்வுகளையும் தினமும் அறியவும். சீனாவை பற்றியும் சீன மக்களின் அன்றாட நலனை அறியவும் எனக்கு உற்ற நான்பதனாக இருந்து வரும் சீன வானொலிக்கு நன்றி நன்றஇ நன்றி கூறுவதுடன் எனது நிழல் எண்ணை விட்டு பிறிவது கிடையாது அது போல நான் என்றும் சீன வானொலியை விட்டு பிரிய போவது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வி-------எங்களுடைய ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் உங்களுடைய உள்ளத்தில் ஏற்படுத்தும் உணர்வுகள் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றன. சரி அடுத்த கடிதம். ரா------நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தி கிரி பகுதியின் தூனேரி நேயர் எஸ் பன்னீர் செல்வம் நமது பிப்ரவரி திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பாராட்டி விட்டு, நேயர்கள் பங்கு பெறும் கருத்தாய்வு உங்கள் குரல் போன்ற நிகழ்ச்சிகள் ஒரேமாதிரியாக உள்ளன என்கிறார். வி------நேயர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவது நேயர்களஇன் கையில் தான் உள்ளது, நாங்கள் உங்கள் கருத்தைச் சொல்லும் வாகனம் மட்டுமே, சரி அடுத்த கடிதம். ரா------வேலூர் மாவட்டம் ராமபாளையம் நேயர் முனுகப்பட்டு பி கண்ணன் சேகர் கடிதம். நமது பிப்ரவரி திங்கள் நிகழ்ச்சிகளை பாராட்டியுள்ளார். குறிப்பாக சீன சமூக வாழ்வு சீன மகளிர் சீன உணவு அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் இவரைக் கவர்ந்துள்ளன. சீன உணவு தமிழகத்தில் பலரும் விரும்பி உண்ணும் உணவாக மாறும் என்கிறார். வி-------அப்படியா. ரா-------ஒன்று சொல்லட்டுமா, இந்தியா முழுவதும் உணவு விடுதிகளில் செனீஸ் டிஷ் என்று சொல்லி நாடுல்ஸ் மஞ்சூரியன் என்று தருகிறார்கள். ஆனால் அவை சீனத் தயாரிப்பில் இருந்து மாறுப்பட்டுள்ளன. கூடிய விரைவில் சீனாவில் உள்ள இந்திய உணவுகள் கலைஞர்களைப் பேட்டி கண்டு சரியான சீனச் சமையல் குறிப்புக்கள் பற்றி ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளோம்.
|