• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-30 21:39:04    
சின்சியாங்கின் பொருளாதாரம்

cri

அவாது எனும் கூட்டு நிறுவனம், சீனாவின் சின்சியாங் வைகூர் தன்னாட்சி பிரதேசத்தின் ஈனின் நகரத்துப் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது. இக்கூட்டு நிறுவனம் உற்பத்தி செய்யும் விரைவாக சமைத்துச் சாப்பிடக்கூடிய நூடல்ஸ், ஹசாக்ஸ்தான், ஜிர்ஜிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் வரவேற்பு பெற்றள்ளது. சுற்று சூழல் மற்றும் மூலவளத்தின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு தான், அவாது, சின்சியாங்கில் முதலீடு செய்துள்ளது என்று, அதன் மேலாளர் ZHUANG YULAN அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இங்குள்ள சுற்று சூழல், நல்லது. காற்று மாசுப்படவில்லை. தூய்மைக்கேற்ற உணவு பொருட்களின் உற்பத்திக்கு இது துணைபுரிகிறது. அத்துடன், சின்சியாங்கின் மூலவளங்களும் ஏராளமாக உள்ளன. ஆகவே, இங்கு சுமார் 10 கோடி ரென்மின்பி யுவானை முதலீடு செய்யவுள்ளோம் என்றார் அவர்.

இதைப்போல, சின்சியாங்கின் பிரதேசத் தனிச்சிறப்பையும், மூலவள மேம்பாட்டையும் பயன்படுத்தி, உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவது என்பது, தற்போது, சின்சியாங் வெளிநாட்டு பொருளாதார வர்த்தகத்தை வளர்ச்சியுறச்செய்யும் முக்கிய வழிமுறையாக மாறியுள்ளது. சின்சியாங் வைகூர் தன்னாட்சி பிரதேசம், மேற்கு சீனாவின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு, சுமார் 16 லட்சம் சதுர கிலோமீட்டர். அது, ஹசாக்ஸ்தான், பாக்கிஸ்தான், ரஷியா முதலிய நாடுகளைஒட்டி அமைந்ததால், சின்சியாங்கும், சீனாவின் இதர மேற்கு பகுதிகளும், மத்திய ஆசியா, மேற்காசியா மற்றும் ஐரோப்பாவுடன் பொருளாதார வர்த்தகப் பரிமாற்றத்தை வளர்ச்சியுறச்செய்வதற்கு வசதி ஏற்பட்டுள்ளது. தவிர, சின்சியாங்கிலான ஏராளமான இயற்கை மேய்ச்சல் பண்ணைகள், கால்நடை வளர்ப்பு துறையின் வளர்ச்சிக்கு சீரான நிலைமையையும் உருவாக்கியுள்ளன.

இலீ ஹசாக் இன தன்னாட்சி சேள, சின்சியாங்கின் மேற்கு பகுதியில் இருக்கிறது. இதன் வணிகத்துறை இயக்குநர் AN JIANZHONG, எமது செய்திமுகவரிடம் பேசுகையில், இலீ ஹசாக் இன தன்னாட்சி சேளவின் மூலவள மேம்பாடு, உள்ளூரின் பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு கொண்டுவந்த நலனை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

ஹசாக்ஸ்தான் உள்ளிட்ட நாடுகளை ஒட்டி அமைந்துள்ளதால், மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் வாய்ந்த மத்திய ஆசிய சந்தையை, இப்பிரதேசம் எதிர்நோக்குகிறது. இதன் மூலம், ஐரோப்பியாவின் பல நாடுகளின் சந்தைக்கும் விரிவடைந்துள்ளது. இந்த மேம்பாடு, சந்தைக்கு வழிகாட்டுவதில் பெரும் பங்காற்றியுள்ளது என்றார் அவர்.