
இவ்வாண்டு, நிதி கொள்கையின் சீர்திருத்தத்திற்கு நிதானமான குறிக்கோளை சீன மத்திய வங்கி முன்வைத்தது. நுகர்வுடன் நெருங்கிய தொடர்புடைய மொத்த நாணய வினியோக அளவு 15 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். புதிதாக அதிகரிக்கும் கடன் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2004ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்த இரண்டு இலக்குகள் ஓரளவு தணிவடைந்துள்ளன. ஆனால் பெரும் மாற்றம் இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பொருளாதார வளர்ச்சி, உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது. இத்தகைய சார்ந்து நிற்கும் பொருளாதார வளர்ச்சியை வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் பலர் உறுதிப்படுத்தினர். சீனாவிலுள்ள ஜப்பானிய வணிக சங்கத்தின் துணை தலைவரும், ஜப்பானிய Tokyo-Mitsubishi வங்கியின் பெய்ஜிங் கிளைத் தலைவருமான Hirokazu Yanagigaoka சீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவு பற்றி குறிப்பிடுகையில், தற்போது, சீன-ஜப்பானிய பொருளாதாரம் நாளுக்கு நாள் நெருங்கி வருகின்றது. சீனாவில் முதலீடும் சீனாவுடனான வர்த்தகமும் இல்லை என்றால், ஜப்பானிய பொருளாதாரம் இத்தகைய வேகத்துடன் வளர்ச்சியடைய முடியாது என்றார். இவ்வாண்டு சீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவின் வளர்ச்சி மீது தாம் பேரார்வம் காட்டுவதாக செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு பற்றி, சீனாவிலுள்ள அமெரிக்க வணிக சங்கத்தின் தலைவர் Charles M. Martin, சீனப் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு தந்துள்ள நலனையும் வாய்ப்பையும் ஆராய்ந்தார். 2004ஆம் ஆண்டு, மிக அதிகமான அமெரிக்க சரக்குகளை இறக்குமதி செய்யும் நாடாக சீனா மாறியது. இதற்கிடையில், சீனா அமெரிக்காவின் இறக்குமதி சரக்குகளின் ஐந்தாவது மூல நாடாகும் என்று அவர் கூறினார். சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியினால், சீனாவிலுள்ள அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், தென் கிழக்காசிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றுடனான பொருளாதார வர்த்தக உறவு சீராக வளர்ச்சியுற்று வருகின்றது. சீனப் பொருளாதார வளர்ச்சிக்கும் உலக பொருளாதார வளர்ச்சிக்கும் இது மிகவும் சாதகமானது என்று பொருளாதார துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். 1 2 3
|