• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-08 14:12:02    
பாலக்குமாரின் கடிதம்

cri
நேயர் நேரம் மே திங்கள் நான்காம் நாள் நிகழ்ச்சி வி-------வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் பகுதிக்கு உங்கல் அனைவரையும் வரவேற்பது ரா--------ராஜாராம் வி-------விஜயலட்சுமி. ராஜா, இன்றைக்கு நல்ல நேரமா ரா--------ஆமா நம்ம நேயர்களுக்கும் நமக்கும் நல்ல நேரம் தான், சீன வானொலி தனது செல்ல நேயர்களுக்கு அக்கறையோடு அனுப்பி வைத்த அன்பளிப்புக்கள் கிடைத்தன என்று பல நேயர்கள் தெரிவித்துள்ளனர். அப்புறம் நாம் ஒலிபரப்பிய தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. வி-------- குறிப்பாக ரா-------குறிப்பாக சேந்த மங்கலம் நேயர் எஸ் எம் ரவிச்சந்திரன் தமது மின்னந்சலில், பொன் தங்கவேலன் ஆரணி அண்ணாமலை மற்றும் விழுப்புரம், கோவை மாவட்ட நேயர்கள் வழங்கிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன என்றஉ பாராட்டியுளஅளார். பள்ளி மாணவ மாணவிகளுடன் விளக்கம் அளித்தது போல தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி இருந்தது என்கிறார் புதுவை நேயர் என் பாலக்குமார் கடந்த ஏப்ரல் 11 அன்று ஒலிபரப்பான முதல் சிறப்பு நிகழ்ச்சி பழைய புதிய நேயர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளவனூர் கே சிவக்குமார் கோபாபு ஆகியோர் புதிய நேயர்களாக இருந்த போதிலும் சிறப்பாக செயல்பட்டு அனுப்பிய நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். வளவனூர் புதுப்பாளையம் நேயர் எஸ் செல்வம் வி------பாராட்டுக்களுக்கு நன்றி. சிறப்பு நிகழ்ச்சிகலைத் தயாரிப்பதில் நேயர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம், அவர்களை நிறையப் படிக்கும்படி சீன வானொலி தூண்டுகிறது. ரா-------படிக்க படிக்கத்தான் சிந்தனை வளரும் இல்லையா சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவில் இந்தியப் பயணம் பற்றி சீன வானொலி ஏராளமான செய்திகளை தினந்தோறும் அளித்தது. இந்தப் பயணம் இரு தரப்பு உறவில் ஒரு மைல்கல் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார். வளவனூர் புதுப்பாளையம் செல்வம் மேலும், இப்போது இரவு ஒலிபரப்பு தெளிவாக கேட்கிறது. எல்லா நேயர்களுக்கும் சீனத் தமிழொலி பத்திரிகை கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதே தகவலை சேந்தமங்கலம் எஸ் எம் ரவிச்சந்திரனும் தெரிவித்துள்ளார். வி-------எங்கள் முயற்சி வீண்போகவில்லை என்று அறிய மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். ரா-------cri sms net என்ற அமைப்பு பற்றி கேள்விப்பட்டு நேயர்கள் பலர் சேர்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் புதுவை என் பாலகுமார்.