• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-08 19:44:58    
தெற்காசிய பொருட்கள் பெய்ஜிங்கில் வரவேற்கப்பட்டது

cri

கடந்த சில ஆண்டுகளாக, பெய்ஜிங் மாநகரில் ஒரு புதிய பரபரப்பான போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் முதலிய தெற்காசிய நாடுகளில் தயாராகும். சட்டைகள், நகைகள், மற்றும் கலைப் பொருட்கள், மேன்மேலும் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகள் பெய்ஜிங் நகரில் புதிய அழகான காட்சிக் கூடங்களை அமைத்துள்ளன.

புகழ்பெற்ற அருங்காட்சியகத்துக்கு வடபகுதியல், ஷிசாஹாய் எனும் அமைதியான ஏரி இருக்கிறது. லொசான் எனும் திபெத்தியரும், அவரின் சகோதரியும், இந்த ஏரியின் பக்கத்தில் ஆகாயத்தயாரிப்பு எனும் தெற்காசிய பொருட்களை விற்பிக்கும் கடையைத் திறந்துள்ளனர்.

ஏப்ரல் திங்களின் ஒரு பிற்பகலில், எமது செய்தியாளர் இந்தக் கடைக்குச் சென்றார். அதன் தனிச்சிறப்பு மிக்க வாய்ந்த நுழைவாயிலில் சிவப்பு மற்றும் பச்சை நிற சாலிகள், காற்றில் அசைந்தாடுகின்றன. கடையின் குதூகல மூட்டும் இந்த நிறங்கள் செய்தியாளரை ஈர்க்கிறது. சுவரில் பல்வேறு வகை சாலிகளும் கம்பளிப்போர்வைகளும் தொங்கவிடப்பட்டு, பைகள், சட்டைகள் முதலியவை, மேசையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பச்சை அண்மயிலின் மயில் மற்றும் வெள்ளை கற்கள் பதித்த பல்வேறு வகை வெள்ளி நகைகள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

இக்கடையின் நிர்வாகினர் லொசான், திபெத் இன மொழியில் எமது நேயர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

லொசானின் குடும்பம் திபெத் கான்பா பிரதேசத்தில் வெள்ளி நகை தயாரிப்பதில், புகழ்பெற்றது. 7 ஆண்டுகளுக்கு முன், அவர் பெய்ஜிங் வந்து, ஒரு கடையைத் திறந்து, திபெத் நகைகளை சிறப்பாக விற்பனை செய்கின்றார். இந்தக் கடையில், திபெத் நகைகள் மட்டுமல்ல, இந்தியா, நேபாளம் ஆகியவற்றின் நகைகளும் இருக்கின்றன. ஆனால், 6 ஆண்டுக்கு முன், அவர் இந்த நாடுகளிலிருந்து கொண்டு வந்த நகைகளுக்கு வரவேற்பு கிடைக்க வில்லை. அவர் கூறியதாவது:

சுற்றுலா வளர்ச்சியால், இந்தியா நேபாளம் ஆகியவற்றுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர் மேன்மேலும் அதிகமாகும். இந்த நாடுகள் பற்றிய விளம்பரம் அதிகமாக இருக்கிறது. தற்போதைய இளைஞர்கள் நிம்மதியை எதிர்பார்க்கின்றார்கள். இந்தியா, நேபாளம் உள்ளிட்ட புத்த நாடுகள், மனத்துக்கு நிம்மதியையும் அமைதி உணர்வையும் தர முடியும். இவற்றின் பெரும்பாலான நகைகள், ஒரே மாதிரியாக இருக்கிறன. தனிச்சிறப்பு வாய்ந்து திகழ்கின்றன என்றார் அவர். இந்தக் கடையில், பொருளை வாங்கிக்கொண்டிருக்கும் வை சியேள லின், எமது செய்தியாளருக்கு பேட்டியளித்தார். தெற்காசியாவின் சட்டைகளும் நகைகளும் தன்னை மேலும் கவர்ச்சியாக மாற்றும் என அவர் தெரிவித்தார்.

இந்த வடிவம், பல வகைத் தேவைகளை நிறைவு செய்கிறது. மிக சிறந்தான தயாரிப்புக்களும் அல்லது வண்ணம் மிக்க பொருட்களும், இங்கு காணலாம். அழகான இயற்கையான புதிய பொருட்கள் மற்றும் பழைய பொருட்களைத் தேடி வாங்கும் தேவை நிறைவு செய்யப்படும் என்றார் அவர்.