• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-09 10:01:31    
48வது உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி

cri

48வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டி ஏப்ரல் திங்கள் 30ஆம் நாள் முதல் மே திங்கள் 6ஆம் நாள் வரை சீனாவின் ஷாங்கை மாநகரில் நடைபெற்றது. 145 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1500க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் பயிற்சியாளர்களும் இதில் கலந்துகொண்டனர். உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி வரலாற்றில் இது முன்கண்டிராதது.

மே திங்கள் 5ஆம் நாள் நடைபெற்ற ஆடவருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீரர்கள் குங் லிங் ஹுய் வாங் ஹௌ ஜோடி 4-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனின் ஒரு ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியும் இரண்டும் சீன வீரர்களிடையில் நடைபெற்றது. உலக பெயர் வரிசையில் முதலிடம் பெற்ற வாங் லி ச்சின் 4-2 என்ற செட் கணக்கில் தனது அணி தோழரான உலக பெயர் வரிசையில் இரண்டாம் இடம் பெற்ற மா லினைத்தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

மே திங்கள் 4ஆம் நாள் நடைபெற்ற ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன வீரர் வாங் லி ச்சின் வீராங்கனை கோ யே ஜோடி 4-3 என்ற செட் கணக்கில் சீன வீரர் லியூ கோ செங், வீராங்கனை பை யாங் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சீன வீரர் யன் சென் வீராங்கனை கோ யன் ஜோடியும் சீன வீரர் தாங் யீ கோ, வீராங்கனை சௌ சென் ஜோடியும் மூன்றாம் இடம் பெற்றன.

மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீனாவின் புகழ்பெற்ற வீராங்கனை உலக பெயர் வரிசையில் முதலிடம் வகிக்கும் சாங் யி நிங் 4-2 என்ற செட் கணிக்கில் தனது தோழியரான கோ யன்னைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். முன்னதாக அவர் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும், உலக கோப்பைக்கான மேசை பந்துப் போட்டியிலும் அவர் பெற்றிருந்தார். இவ்வாறு உலகின் மூன்று பெரிய போட்டிகளிலும் சாம்பயன் பட்டம் பெற்றுள்ளார்.

மகளிருக்கான இரட்டையர் இறுதிப் போட்டி சீன விளையாட்டு வீராங்கனைகளுக்கிடையில் மே 6ஆம் நாள் நடைபெற்றது. சீன வீராங்கனைகளான வாங் நான் சாங் யி நிங் ஜோடி, 4-1 என்ற செட் கணக்கில் தமது அணி தோழியர்களான நியூ ச்சின் பெங் கோ யே ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பின், பரிசு வழங்கல் விழா நடைபெற்றது.